Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சாதாரண குடும்ப புகைப்படங்களை Class ஆக மாற்றும் Gemini AI.. எடிட் செய்வது எப்படி?

Transform Your Family Pics with Gemini AI | தற்போது செயற்கை நுண்ணறிவு அம்சங்களான சாட்ஜிபிடி, ஜெமினி ஏஐ ஆகியவற்றின் மூலம் பலரும் தங்களது புகைப்படங்களை எடிட் செய்கின்றனர். அந்த வகையில் ஜெமினி ஏஐ மூலம் குடும்ப புகைப்படங்களை எடிட் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

சாதாரண குடும்ப புகைப்படங்களை Class ஆக மாற்றும் Gemini AI.. எடிட் செய்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 18 Sep 2025 18:48 PM IST

இன்ஸ்டாகிராம் (Instagram), வாட்ஸ்அப் (WhatsApp), பேஸ்புக் (Facebook) என எந்த சமூக ஊடகங்களை திறந்தாலும் அனைத்தில் தற்போது டிரெண்டாக உள்ளது செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) மூலம் எடிட் செய்யப்படும் புகைப்படங்கள் தான். இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தில் ஏராளமான எடிட்டிங் அம்சங்கள் உள்ள நிலையில், ஒவ்வொன்றாக அவை வைரலாகி வருகின்றன. இந்த புதிய புதிய டிரெண்டுகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், சாதாரண குடும்ப புகைப்படங்களை ஏஐ மூலம் அழகிய புகைப்படங்காள மாற்றுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாதாரண புகைப்படங்களை கிளாசான புகைப்படங்களாக மாற்றுவது எப்படி?

செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் தற்போது பல வேலைகளை மிக சுலபமாக செய்து முடித்துவிட முடிகிறது. சாதரணமாக ஒரு அழகான இடத்திற்கு சென்று நல்ல புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ,10,000 செல்வாகும். ஆனால், செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் செலவே இல்லாமல் புகைப்படங்களை மிக அழகாக எடிட் செய்ய முடியும். பிடித்த மாதிரியான இடம், உடை, போஸ் என அனைத்தையும் தேர்வு செய்ய முடியும். இந்த நிலையில் ஒரு சாதாரன குடும்ப புகைப்படத்தை எப்படி அழகான புகைப்படங்களாக மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : நம் பெயர் தெரியாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி? இதோ 3 டிரிக்ஸ்

ஏஐ சாதாரண புகைப்படங்களை அட்டகாசமாக மாற்றலாம்

  1. அதற்கு முதலில் கூகுள் ஜெமினிக்குள் செல்ல வேண்டும்.
  2. அங்கே கொடுக்கப்பட்டுள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதில் எந்த புகைப்படத்தை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  4. பிறகு அந்த புகைப்படத்தில் நீங்கள எவற்றையெல்லாம் இணைக்க விரும்புகிறீர்கள் என்பதை பதிவிட வேண்டும்.

புகைப்படங்களை எப்படி எடிட் செய்வது

உதாரணமாக நீங்கள் கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உடனான புகைப்படத்தை ரெட்ரோ ஸ்டைலில் எடிட் செய்ய விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு கீழகண்டவாறு பிராம்ட்டுகளை நீங்கள் கொடுக்க வேண்டும்.

“Create a retro style image with this reference photo. Girl should be in pink top and white long skirt. The guy should be in white shirt and blue pant. The baby boy should be in white shirt and blue shorts. The baby girl should be in pink top and white short skirt”.

மேற்குறிப்பிட்ட இத்தகைய பிராம்ப்டை பயன்படுத்தி நீங்கள் உங்களது குடும்ப புகைப்படங்களை எடிட் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு மிக அழகான புகைப்படம் கிடைக்கும்.