Meta Ray Ban ஜென் 2 ஏஐ ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்.. அட இத்தனை அசத்தல் அம்சங்களா?
Meta Ray Ban Gen 2 AI Smart Glasses | வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா தனது மெட்டா ரேபான் ஜென் 2 ஏஐ ஸ்மார்ட் கண் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மெட்டா (Meta) நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்துடன் கூடிய கண் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் செப்டம்பர் 17, 2025 அன்று இந்த கண் கண்ணாடியை அறிமுகம் செய்து வைத்தார். ரேபான் கண்ணாடியில் ஒரு சிறிய அளவு டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியாக இது அறிமுகமாகியுள்ளது. இந்த நிலையில், இந்த கண்ணாடியில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஏஐ உடன் கூடிய கண் கண்ணாடி
உலக அளவில் பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலிகளின் தாய் நிறுவனம் தான் இந்த மெட்டா. இந்த நிறுவனம் மிகவும் அட்டகாசமான வடிவத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சத்துடன் கூடிய கண் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. இந்த கன்ணாடி மூலம் எப்போதும் ஸ்மார்ட்போன்களை பார்த்துக்கொண்டு இருக்கும் தேவைகள் இருக்காது. குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிப்பது, புகைப்படங்களை பார்ப்பது, போன் கால்கள் பேசுவது என அனைத்தையும் இந்த கண்ணாடி மூலம் செய்து முடித்துவிடலாம்.
இதையும் படிங்க : இன்ஸ்டா ஸ்டைலில் போட்டோ எடுக்கணுமா? அப்போ இந்த டிரிக்ஸை டிரை பண்ணுங்க!




மெட்டாவின் ஏஐ கண்ணாடி – சிறப்பு அம்சங்கள் என்ன?
மெட்டா அறிமுகம் செய்துள்ள இந்த கண்ணாடியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.
காட்சிகள்
இந்த கண்ணாடியில் காதில் ஓசை கேட்கும் நிலையில், கண்ணுக்கு முன்பு திரை தோன்றி அதில் அனைத்து சேவைகளும் தெரியும். இது முன் எப்போது இல்லாத வகையில் மிகவும் அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி மற்றும் வீடியோ கால்
நீங்கள் ஏதேனும் செயலியை பயன்படுத்துக்கொண்டு இருக்கும்போதோ, அல்லது யாருக்கேனும் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டு இருக்கும்போதோ போன் கால்கள்கள் வந்தால் அவற்றில் இருந்து வெளியே வர தேவையில்லை. இந்த கண்ணாடி மூலம் உங்களால் போன் கால்கள் முதல் குறுஞ்செய்திகளை படிப்பது வரை அனைத்தையும் செய்ய முடியும்.
இதையும் படிங்க : ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 56% தள்ளுபடி.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் கொட்டிக்கிடக்கும் சலுகைகள்!
மொழிப்பெயர்ப்பு
நீங்கள் ஏதேனும் வீடியோ அல்லது திரைப்படங்களை பார்க்கும்போது இந்த கண்ணாடியின் திரையில் லைவ் கேப்ஷன்கள் தோன்றும்.
மியூசிக் பிளேபேக்
இந்த கண்ணாடி மூலம் இசை கேட்கும்போது பாடல்களை மாற்றுவது, பாடல் கேட்கும் ஓசையை குறைப்பது மற்றும் உயர்த்துவது ஆகியவற்றையும் இதன் உடன் கொடுக்கப்படும் கைபேண்டு முதல் மாற்றம் செய்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.