குறைந்த விலையில் அசத்தல் அம்சங்கள்.. வெறும் ரூ.10,499-க்கு அறிமுகமான ரியல்மி பி3 லைட் 5ஜி!
Realme P3 Lite 5G Smartphone | ரியல்மி நிறுவனம் சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரியல்மி (Realme) நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்க மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. காரணம், ரியல்மி சாமானிய மக்கள் வாங்க கூடிய வகையில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை (Budget Smartphones) தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் ரியல்மி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ரியல்மி நிறுவனம் தற்போது இந்தியாவில் மேலும் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி பி3 லைட் 5ஜி (Realme P3 Lite 5G) என்ற ஸ்மார்ட்போனை தான் அது தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி3 லைட் ஸ்மார்ட்போன்
ரியல்மி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன ஆன ரியல்மி பி3 லைட் ஸ்மார்ட்போனை மூன்று நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனையும், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,499-க்கும், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.11,499-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.




இதையும் படிங்க : iPhone 16 Pro : இதவிட குறைந்த விலையில் வாங்கவே முடியாது.. ரூ.1.1 லட்சத்துக்கான ஐபோன் 16 ப்ரோவை வெறும் ரூ.69,000-க்கு தரும் பிளிப்கார்ட்!
ரியல்மி பி3 லைட் ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
New launch alert📢
The Realme P3 Lite 5G has been launched in India at Rs 10,499.
Key specs:
– 6000mAh battery, 45W fast charging
– MediaTek Dimensity 6300 5G
– IP64 rating
– 120Hz Display
– 32MP AI Camera pic.twitter.com/t5dizlkarU— 91mobiles (@91mobiles) September 15, 2025
இதையும் படிங்க : இனி ஹிந்தி, தெலுங்கு வீடியோக்களை நேரடியாக தமிழில் பார்க்கலாம் – யூடியூபில் வந்தாச்சு புதிய வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் HD+IPS LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6nm octa-core பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன் பக்கம் 32 மெகா பிக்சல் ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல கேமராவின் பின் பக்கம் 8 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1,000 வரை வங்கி சலுகை வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 22, 2025 முதல் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.