ஏலியன் வருகை முதல் 3ஆம் உலக் போர் வரை.. 2026-ல் இதெல்லாம் நடக்கும்.. பதற வைக்கும் பாபா வங்காவின் கணிப்புகள்!
Baba Vanga 2026 Predictions | அவ்வபோது பாபா வங்காவின் கணிப்புகள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் என்ன என்ன நிகழ்வுகள் நடைபெற உள்ளது என்பது குறித்த பாபா வங்காவின் கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதில் மூன்றாம் உலகப் போர், ஏலியன்கள் வருகை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பூமியில் ஏதேனும் பேரழிவு அல்லது ஆபத்து ஏற்படும் என யாரேனும் தங்களது கணிப்பை வெளியிட்டால் அது உடனடியாக வைரலாக தொடங்கிவிடும். இத்தகைய கணிப்புகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் நிலையில், பாபா வங்காவின் கணிப்புகள் என்றால் அது குறித்து பொதுமக்கள் கவலை அடைய தொடங்கிவிடுவர். காரணம், ட்வின் டவர் அட்டாக், லண்டனின் 2022 வெள்ளம் ஆகியவற்றை பாபா வங்கா மிக துல்லியமாக கணித்திருந்தார். பாபா வங்காவின் பல கணிப்புகள் உண்மையாக மாறியுள்ள நிலையில், தொடர்ந்து வெளியாகி வரும் அவரது கணிப்புகள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் என்ன என்ன நடக்கும் என்பது குறித்த பாபா வங்காவின் கணிப்புகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
2026-ல் இதெல்லாம் நடக்கும் – பாபா வங்கா
2026 ஆம் ஆண்டு ஏற்பட உள்ள இயற்கை பேரழிவுகள், முக்கிய மாற்றங்கள் ஆகியவை குறித்த பாபா வங்காவின் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
மூன்றாம் உலகப் போர்
2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நிகழ்வுகளை பாபா வங்கா கணித்துள்ள நிலையில், அதில் முக்கியமான கணிப்பாக மூன்றாம் உலகப் போர் உள்ளது. பாபா வங்காவின் கூற்றுப்படி 2026 ஆம் ஆண்டு மூன்றாம் உலகப் போர் உருவாகும் என கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பிரச்னை, ரஷ்யா உடன் அமெரிக்கா மோதுவது, தைவான் சீனா இடையேயான சிக்கல்கள் ஆகியவை மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் என கூறப்படுகிறது.




இதையும் படிங்க : North Korea : இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்தவே கூடாது.. வடகொரியாவில் கிம் ஜாங் உன் புதிய உத்தரவு!
ஏஐ ஆதிக்கம்
தற்போதைய காலக்கட்டத்தில் உலக அளவில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், 2026-ல் செயற்கை நுண்ணறிவு மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் என்று பாபா வங்காவின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏலியன்கள் பூமிக்கு வரும்
ஏலியன்கள் தொடர்பான ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதனை உறுதி படுத்தும் விதமாக எந்த வித ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், பாபா வங்கா தனது கணிப்பில் 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏலியன்கள் பூமிக்கு வருகை தரும் என கூறியுள்ளார். பூமியில் மிகப்பெரிய ஸ்பேஸ் கிராஃப்ட் நுழையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நாய் என திட்டியதால் தற்கொலை செய்துக்கொண்ட பெண் ஊழியர்.. நிறுவனத்துக்கு ரூ.90 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்!
பாபா வங்கா 1996 ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்ட நிலையில், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அவர் முன்கூட்டியே கணித்து வைத்துள்ளார். அந்த கணிப்புகள் தான் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.