Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தெஹ்ரிக் – இ தலிபான் பாகிஸ்தான் மீது வான்வழி தாக்குதல்.. 30 பேர் உயிரிழப்பு..

Pakistan: கைபர் பக்துன்க்வாவில் உள்ள தெஹ்ரிக் - இ தலிபான் பாகிஸ்தான் ( டிடிபி ) மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 20 முதல் 30 பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்ததாக நம்பப்படுகிறது.

தெஹ்ரிக் – இ தலிபான் பாகிஸ்தான் மீது வான்வழி தாக்குதல்.. 30 பேர் உயிரிழப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 22 Sep 2025 20:14 PM IST

பாகிஸ்தான், செப்டம்பர் 22, 2025: கைபர் பக்துன்க்வாவில் உள்ள தெஹ்ரிக் – இ தலிபான் பாகிஸ்தான் ( டிடிபி ) மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தனது நாட்டில் பயங்கரவாதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துன்க்வா பகுதியில் உள்ள திரா பள்ளத்தாக்கில் அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் விமானப்படை (PAF) JF-17 போர் விமானங்கள் 8 LS-6 குண்டுகளை வீசின.

மேலும் படிக்க: குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3 லட்சம் பரிசு.. தைவான் அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தத் தாக்குதல் பாகிஸ்தான் தாலிபான் (TTP) பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் இராணுவம் பயங்கரவாதிகளை குறிவைத்து அதில் சுமார் 20 முதல் 30 பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் படிக்க: எச்1பி விசா கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. அமெரிக்க அரசு அதிரடி!

இந்த தாக்குதலில் ஐந்து முதல் 10 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இறப்பு எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.