H1B Visa : எச்1பி விசா கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. அமெரிக்க அரசு அதிரடி!
White House on H1B Visa | டொனால்ட் டிரம்ப் எச்1பி விசா கட்டணத்தை உயர்த்தி வெளியிட்டுள்ள உத்தரவு செப்டம்பர் 20, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

வாஷிங்டன், செப்டம்பர் 21 : எச்1பி விசா (H1B Visa) கட்டணம் புதியதாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமெரிக்க அரசு (American Government) அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) எச்1பி விசாக்களுக்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்துவது கேள்விக்குறியாக மாறியது. இந்த நிலையில், தான் வெள்ளை மாளிகை எச்1பி விசா கட்டணம் குறித்த விளக்கத்தை அளித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எச்1பி விசா கட்டணத்தை உயர்த்திய டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றது முதல் இருந்தே டிரம்ப் அங்கு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்1பி விசவுக்கான கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தினார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் ஆகும். டிரம்ப் போட்ட இந்த புதிய விசா கட்டண உத்தரவு செப்டம்பர் 20, 2025 நள்ளிரவு முதல் அமெரிக்காவில் அமலுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானில் இணைய சேவையை முடக்கிய தலிபான்கள்.. பொதுமக்கள் அவதி!




21 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப அறிவுரை
எச்1பி விசா குறித்த டிரம்பின் புதிய உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் எச்1பி விசா வைத்திருக்கும் நபர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்ப அதிகாரிகள் உத்தரவிட்டனர். விடுமுறை, வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள் செப்டம்பர் 21, 2025-க்குள் நாடு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான், அது குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க : போதைப்பொருள் அச்சுறுத்தல் நாடுகள்.. இந்தியா பெயரை சேர்த்த ட்ரம்ப்!
எச்1பி விசா கட்டணம் – வெள்ளை மாளிகை விளக்கம்
எச்1பி விசா குறித்து விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகை, அமெரிக்க விசா கட்டண உயர்வு புதிதாக விசா கேட்டு விண்ணப் செய்பவருக்கு மட்டும் தான் 1 லட்சம் டாலர் கட்டணம். ஏற்கனவே எச்1பி விசா வைத்திருப்பவர்கள் விசாசை புதுப்பிக்கும் நபர்கள் ஆகியோருக்கு இந்த புதிய கட்டண முறை பொருந்தாது என்று கூறியுள்ளது. அமெரிக்கா அரசின் இந்த அறிவிப்பு அங்கு ஏற்கனவே பணிபுரியும் ஊழியர்களுக்கு நிம்மதியாக அமைந்துள்ள நிலையில் புதியதாக பணியில் சேர உள்ளவர்களுக்கு பரும் பாதிப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.