Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆப்கானிஸ்தானில் இணைய சேவையை முடக்கிய தலிபான்கள்.. பொதுமக்கள் அவதி!

Taliban Cuts Wifi in Afghanistan | ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தது முதலே அங்கு பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (செப்டம்பர் 18, 2025) ஆப்கானிஸ்தான் முழுவதும் அவர்கள் வைஃபை இணைய வசதியை முடக்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இணைய சேவையை முடக்கிய தலிபான்கள்.. பொதுமக்கள் அவதி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Sep 2025 22:05 PM IST

காபூல், செப்டம்பர் 18 : ஆப்கானிஸ்தானில் (Afghanistan) அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தலிபான் அரசு இணைய சேவையை முடக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதலே பல கடுமையான விதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில், தற்போது வைஃபை இணைய வசதியை துண்டித்துள்ளது பொதுமக்களுக்கு மேலும் ஒரு சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இணைய சேவையை முடக்கியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தானில் வைஃபை இணையத்தை முடக்கிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறின. இதன் காரணமாக அங்கு தலிபான்களின் ஆட்சி அமைந்தது.  ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைந்தது முதலே அங்கு மிக கடுமையான விதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையில், அவர்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்பது வரை மிக கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பெண்கள் மட்டுமன்றி, ஆப்கானிஸ்தான் மக்கள் கடும் சிக்கலான வாழ்க்கை சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : நடுவானில் பறந்த விமானம்.. திடீரென புகை வந்ததால் பரபரப்பு.. அவசர அவசரமாக தரையிறங்கியது!

அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், வீடுகளுக்கான இணைய சேவை முடக்கம்

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு வைஃபை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செல்போன்களுக்கான இணைய சேவை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர். செப்டம்பர் 16, 2025 அன்று முதல் வடக்கு பால்க் மாகாணத்தில் வைஃபை இணைய சேவை முடக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 18, 2025) ஆப்கானிஸ்தான் முழுவதும் வைஃபை இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ராணுவ பலத்தில் எந்த நாடு பெரியது? இந்தியாவுக்கு எந்த இடம்? முழு விவரம்

தலிபான் அரசின் இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானில் உள்ள லட்சக்கணக்கான பொதுமக்களின் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை முடக்கியுள்ளது. தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு ஊடக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தலிபான் அரசின் நடவடிக்கையால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.