Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வீட்டில் வைஃபை ஸ்லோவாக இருக்கிறதா? இந்த எளிய மாற்றங்கள் செலவை குறைக்கும்

How to Get Faster Wi-Fi : இன்றைய காலக்கட்டத்தில் தண்ணீர், கரண்ட் போல ஒவ்வொரு வீடுகளுக்கும் இண்டர்நெட் வசதி இன்றியமையாதது. இந்த நிலையில் வைஃபை சிக்னல் கிடைக்காமல் பலரும் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். இதற்காக எக்ஸ்டெண்டர் வைப்பது தொடங்கி பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

வீட்டில் வைஃபை ஸ்லோவாக இருக்கிறதா? இந்த எளிய மாற்றங்கள் செலவை குறைக்கும்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Aug 2025 19:36 PM

இன்றைய நவீன உலகில் பெரும்பாலான வேலைகளுக்கு இண்டர்நெட்டை (Internet) சார்ந்தே இருக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் இண்டர்நெட் தடைபட்டால் அது நம் அன்றாட செயல்பாடுகளை வெகுவாக பாதிக்கும். சில நேரங்களில் வைஃபை (Wifi) ஸ்லோவாக இருக்கலாம் அல்லது நெட் முற்றிலும் கட் ஆகலாம். இதுபோன்ற நேரங்களில் நம் ரவுட்டர் பழுதாகி விட்டது அல்லது எக்ஸ்டெண்டர் தேவைப்படாலம் என நினைப்போம். ஆனால் வேறு சில காரணங்களாலும் இண்டர்நெட் (Internet) தடை படலாம்.  சில நேரங்களில் வைஃபை ரவுட்டர் வைத்திருக்கும் இடங்கள் கூட நெட் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்கும். இந்த கட்டுரையில் இது நெட் தடைபடுவதற்கான காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கண்ணாடி மற்றும் உலோகப் பொருட்கள்

முகம் பார்க்கும் கண்ணாடி, இரும்பு அலமாரிகள், மெட்டல் பொருட்கள் வைஃபை  சிக்னலை பிரதிபலிக்கின்றன. இதனால், சிக்னல் வீட்டில் சமமாக பரவாமல் போகிறது. ரூட்டரை இவற்றிலிருந்து தள்ளி வைத்தால் சிக்னல் தடையின்றி அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும்.

ப்ளூடூத் கருவிகள்

ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், ஹெட்போன்கள் போன்ற ப்ளூடுத் கருவிகள் வைஃபை போலவே அலைவரிசையில் இயங்குகின்றன. ரூட்டர் இவற்றிற்கு அருகில் இருந்தால் அது சிக்னல் தடைபடுவதற்கு காரணமாக இருக்கும். எனவே வைஃபை ரவுட்டரை இதனுடன் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

இதையும் படிக்க : மழையில் காரை நிறுத்தி வைத்திருக்கிறீர்களா ? இந்த பிரச்னைகள் வரலாம்!

மைக்ரோவேவ் ஓவன்

மைக்ரோவேவ் வைஃபைக்கு மிகப்பெரிய எதிரி. ஓவன் இயங்கும் போது ரூட்டர் சிக்னல் பாதிக்கப்படும். ரூட்டர் சமையலறைக்கு அருகில் இருந்தால், அதை வேறு இடத்துக்கு மாற்றுவது நல்லது.

நீர் நிரம்பிய தொட்டிகள்

நீர் வைஃபை சிக்னலை பாதிக்கும். இதன் அருகில் அக்ரிவேரியம் அல்லது நீர் தொட்டி இருந்தால் சிக்னல் பலவீனமாகும். அவற்றில் இருந்து ரவுட்டரை தள்ளி வைப்பது நல்லது.

இதையும் படிக்க : WhatsApp : மோசடிகளை தடுக்க புதிய அம்சங்கள்.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் வாட்ஸ்அப்!

பெரிய ஃபர்னிச்சர்கள்

 அலமாரிகள், பெரிய சோபா, டேபிள் ஆகியவற்றின் பின்னால் வைஃபை ரவுட்டரை வைத்தால் சிக்னல் பரவுவதில் சிரமம் ஏற்படும். திறந்த இடத்தில், நடுவில், உயரமாக வைப்பது சிறந்தது.

சுவர்கள் மற்றும் கதவுகள்

 சுவர்கள் மறைவில், மூடிய கதவுகள் வைஃபையை தடுத்து விடுகின்றன. மறைவு இல்லாத இடத்தில் ரூட்டரை வைப்பது சிறந்தது என கூறப்படுகிறது. குறிப்பாக எப்போதும் வைஃபை ரவுட்டரை உயர்ந்த இடத்தில் வைப்பது நமக்கு நல்லது.

நமக்கு இண்டர்நெட் கிடைக்கவில்லை என அதிகம் செலவு செய்து எக்ஸ்டெண்டர் அல்லது புதிய வைஃபைக்கு மாறுவதை விட நம் வீட்டில் செய்யும் சிறிய மாற்றங்கள் கூட  வீடியோ கால், ஸ்டிரீமிங், டவுன்லோடு செய்வது என பல வேலைகளுக்கு பெரிதும் கைகொடுக்கும்.