Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டிரம்மில் கிடந்த பச்சிளம் குழந்தை.. தந்தை செய்த கொடூரம்.. கடைசியில் நடந்த ஷாக்!

Maharashtra Crime News : மகாராஷ்டிரா மாநிலத்தில பிறந்து 4 மாதங்களே ஆன குழந்தை கெகாலை செய்யப்பட்டது. குடும்ப தகராறில் தந்தையே பச்சிளம் குழந்தையை டிரம்மில் போட்டு கொலை செய்துள்ளார். இதில், குழந்தை மூச்சுத் திணறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

டிரம்மில் கிடந்த பச்சிளம் குழந்தை.. தந்தை செய்த கொடூரம்.. கடைசியில் நடந்த ஷாக்!
குழந்தையை கொன்று தந்தை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 05 Oct 2025 12:50 PM IST

மகாராஷ்டிரா, அக்டோபர் 05 : மகாராஷ்டிராவில் 4 மாத குழந்தையை தண்ணீர் டிரம்மில் போட்டு தந்தை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாட்டில் பச்சிளம் குழநதைகள் கொலை செய்யப்பட்டது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, பெற்றோர்களே தங்களுக்கு பிறந்த குழந்தைகளை கொடூரமான முறையில் கொலை செய்து வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான் தற்போது மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. ஜியோராய் தாலுகாவில் அமைந்துள்ள தல்வாடா கிராமத்தில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட அமோல் சோனாவனே என அடையாளம் காணப்பட்டவர். இவர் தனது 4 மாத குழந்தைகளை தண்ணீர் டிரம்பில் வீசியுள்ளார்.

இதில் குழந்தை முச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. அமோல் சோனாவனே மற்றும மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இவரும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இருவருக்கு கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. இதனால் தந்தை அமோல் சோனாவனே தனது பச்சிளம் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, குழந்தைகள் தண்ணீர் டிரம்மில் தூக்கி வீசியுள்ளார். இதில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதன்பின், பெற்றோர் இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

Also Read : காதலியை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்த காலதன்.. தானும் தற்கொலை!

4 மாத குழந்தையை கொன்ற தந்தை

நீண்ட நேரமாகியும் இவர்கள் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, குழந்தை டிரம்பில் கிடந்துள்ளது. மேலும், வீட்டின் அறையில் இருவரும் இருந்துள்ளனர். உடனே குழந்தைகள் உட்பட இரண்டு பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் 4 மாத குழந்தை மற்றும் அமோல் சோனாவனே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Also Read : மகளை அடித்துக்கொன்ற தாய்.. தானும் தூக்கிட்டு தற்கொலை.. பெங்களூரில் பகீர் சம்பவம்!

மேலும், தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது- அமோல் மற்றும் அவரது மகனின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தல்வாரா ஆரம்ப சுகாதார மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்ப தகராறில் பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)