Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு.. முதுகெலும்பு வளர்ந்திருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!

Rare Case of Fetus in Fetu in Karnataka | பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு இருப்பது ஒரு அரிதான நிகழ்வாக உள்ள நிலையில், பெங்களூரில் அரசு மருத்துவமனை ஒன்றில் பிறந்த ஆண் குழந்தையின் வயிற்றில் கரு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு.. முதுகெலும்பு வளர்ந்திருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 03 Oct 2025 15:10 PM IST

கர்நாடகா, அக்டோபர் 03 : பெங்களூரில் (Bengaluru) அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையின் வயிற்றில் கரு வளர்த்து வருவதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தையின் வயிறு சற்று பெரியதாக இருந்த நிலையில், மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து இதனை உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில், குழந்தையின் வயிற்றில் கரு வளர்ந்து வருவது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆண் குழந்தையின் வயிற்றில் கரு – அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உள்ளப்பள்ளி பகுதியில் கிம்ஸ் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொள்வதற்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி, செப்டம்பர் 23, 2025 அன்று அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதையும் படிங்க : ஆறு பேரை வீட்டில் வைத்து தீ வைத்து கொளுத்திய விவசாயி.. மூட நம்பிக்கையின் உச்சத்தில் நடைபெற்ற சம்பவம்?

எம்ஆர்ஐ தெரிய வந்த அதிர்ச்சி தகவல்

பிறந்த குழந்தையின் வயிறு சற்று பெரியதாக இருந்துள்ளது. இதால் குழந்தையின் வயிற்றில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம் என நினைத்த மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது குழந்தையின் வயிற்றில் கரு ஒன்று வளர்ந்து வருவதை கண்டு மருத்துவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : குப்பை கொட்டிய விவகாரம்.. அண்ணனை கோடாரியால் வெட்டி கொன்ற தம்பி.. பகீர் சம்பவம்!

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் – மருத்துவ அதிகாரி

இது குறித்து கூறியுள்ள அந்த கிம்ஸ் மருத்துவமனை மருத்துவ அதிகாரி கூறியுள்ளதாவது, பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது தெரிய வந்துள்ளது. அந்த கருவில் முதுகெலும்பு கூடியுள்ளது. தற்போது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துள்ளோம். அதன் அறிக்கை முடிவுகள் தெரிய வந்த பிறகு அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதுபோல பிறந்த குழந்தைகளின் வயிற்றில் கரு உருவாவது மிகவும் அரிதானதாக உள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவில் பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு இருப்பது மருத்துவ வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.