Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – இரண்டு கட்டங்களாக தேர்தல் – ரிசல்ட் எப்போ தெரியுமா?

Bihar Assembly Election 2025 : பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி பீகார் சட்டமன்ற தேர்தல் வருகிற நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரண்டு அன்று நடைபெறவிருக்கிறது. இதற்கான வழிகாட்டுதல்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – இரண்டு கட்டங்களாக தேர்தல் – ரிசல்ட் எப்போ தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Oct 2025 17:26 PM IST

காங்கிரஸ் (Congress) தலைவர் ராகுல் காந்தி வாக்கு திருட்டு சர்ச்சையை எழுப்பிய நிலையில் கடந்த சில மாதங்களாக பீகார் தேர்தல் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. எதிர்கட்சிகள் பாஜக மீது குற்றம் சுமத்திய நிலையில், பாஜக அதனை மறுத்தது. இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி தேர்தல் ஆணையத்தால் (Election Commission) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி பீகார் சட்டமன்ற தேர்தல் வருகிற நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11, 2025 அன்று என இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14, 2025 அன்று நடைபெறவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இதற்கான வழிகாட்டுதல்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பான செய்திகள் கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11, 2025 என இரண்டு தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மூன்று நாட்களுக்கு பிறகு நவம்பர் 14, 2025 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதையும் படிக்க : பீகார் சட்டப்பேரவை தேர்தல் எப்போது? இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

சட்டமன்ற தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம்

 

இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த தேசிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகள் பல கட்டங்களாக தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாக பீகார் சட்டமன்ற தேர்தல் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தேர்தல் ஞானேஷ் குமார் தெரிவித்ததாவது, பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.43 கோடி, இதில் சுமார் 14 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்களாக உள்ளனர். பீகார் தேர்தல் அமைதியான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

இதையும் படிக்க : பீகார் தேர்தல் – 17 திருத்தங்களை அறிவித்த தேர்தல் ஆணையம்

முன்னதாக அக்டோபர் 5, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாட்டிலேயே முதன்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம் பெறும். வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரிகளை அடையாளம் காணும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.  வாக்குச்சாவடிக்கு செல்போனை கொண்டு செல்ல அனுமதியில்லை. கடைசி 2 சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.