Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமைதிக்கான முயற்சியை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும்.. காசாவில் போர் நிறுத்தம் உருவாகும் சூழலில் பிரதமர் மோடி பதிவு!

Gaza - Israel War Nears End | காசா - இஸ்ரேல் இடையேயான சிக்கல் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், அதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான முயற்சியை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும்.. காசாவில் போர் நிறுத்தம் உருவாகும் சூழலில் பிரதமர் மோடி பதிவு!
பிரதமர் நரேந்திர மோடி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Oct 2025 11:31 AM IST

டெல்லி, அக்டோபர் 04 : காசாவில் (Gaza) போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் (Hamas) ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் பல மாதங்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில், அமைத்திக்கான முயற்சியை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் அமைதிக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) எடுத்த முயற்சியையும், அவரது தலைமையையும் வரவேற்கிறோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இஸ்ரேல் – காசா போர்

காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் மிக கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையேயான இந்த போர் 2 ஆண்டுகளுக்கும் மேலான நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க தலையிட்டு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க : வெறும் 2 நிமிடங்களான 2 மணி நேர பயணம்.. உலகின் மிக உயர்மான பாலம் சீனாவில் திறப்பு.. வியக்க வைக்கும் தகவல்கள்!

அந்த வகையில், அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விரைவில் காசாவில் அமைதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பதிவு

இதையும் படிங்க : குலுங்கிய கட்டிடங்கள்.. பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்.. 22 பேர் பலி!

இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கும் – பிரதமர் மோடி

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காசாவில் அமைதியை கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தாங்கள் வரவேற்பதாக அவர் கூறியுள்ளார். பணயக் கைதிகள் விடுதலைக்கான நடவடிக்கைகள் முன்னேற்றத்தை குறிக்கின்றன. நீடித்த மற்றும் நியாமான அமைதியை நோக்கி அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கும் என்று அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.