அனைவரும் தைரியம் மற்றும் தெய்வ பக்தி கொண்டிருக்க வேண்டும்.. விஜயதசமிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்!
Prime Minister Narendra Modi Vijayadasami Wishes | இந்தியா முழுவதும் இன்று (அக்டோபர் 02, 2025) விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடு நாட்டு மக்களுக்கு எக்ஸ் பதிவு மூலம் விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை, அக்டோபர் 02 : இந்தியா முழுவதும் இன்று (அக்டோபர் 02, 2025) விஜயதசமி கொண்டாடப்படும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பொய் மற்றும் தீமையை ஒழித்து நீதியை வெல்லும் இந்த பண்டிகைக்கு அவர் தனது வாழ்த்து செய்தியை பரிமாறியுள்ளார். இந்த நிலையில், விஜயதசமி விழாவுக்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்து குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜயதசமிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி
தீய சக்தியை நல்ல சக்தி வென்றதன் வெற்றியாக இந்தியாவில் விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தென் இந்தியாவில் மகிசாசுரனை துர்க்கை வென்ற நாளாக கோயில்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இந்திய குடிமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அது குறித்து பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : அதிர்ச்சியில் காங்கிரஸ்.. மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பதிவு
विजयादशमी बुराई और असत्य पर अच्छाई और सत्य की विजय का प्रतीक है। मेरी कामना है कि इस पावन अवसर पर हर किसी को साहस, बुद्धि और भक्ति के मार्ग पर निरंतर अग्रसर रहने की प्रेरणा मिले।
देशभर के मेरे परिवारजनों को विजयादशमी की बहुत-बहुत शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) October 2, 2025
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது பொய்க்கும், தீமைக்கு எதிராக உண்மை வெல்லும் உண்ணதமான நாளாக விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளை முன்னிட்டு அனைவரும் சிறந்த தைரியம் மற்றும் தெய்வ பக்தி கொண்டிருக்க வேண்டும் என தான் விரும்புவதாக கூறியுள்ளார். இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கு தான் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இன்று தொடங்கும் 3 புதிய அம்ரித் பாரத் ரயில்கள்.. எந்த வழித்தடம்? முழு விவரம்..
விஜயதசமி விழா இந்தியா முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மட்டுமன்றி உலக தலைவர்கள் பலரும் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.