அதிர்ச்சியில் காங்கிரஸ்.. மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
Mallikarjun Kharge Hospitalized : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2025 செப்டம்பர் 30ஆம் தேதியான நேற்று இரவு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டெல்லி, அக்டோபர் 01 : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது கார்கேவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருப்பவர் மல்லிகார்ஜுன கார்கே. இவருக்கு வயது 83. இவர் கட்சி பணிகள் தீவிரமாக இருப்பார். இதற்கிடையில், தற்போது பீகார் தேர்தல் வரும் நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகளில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே 2025 செப்டம்பர் 30ஆம் தேதியான நேற்று பெங்களூருவில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதாவது, காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, பெங்களூருவில் உள்ள எம்எஸ் ராமய்யா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். தற்போது அவரது உடல் நிலை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Also Read : 126வது மன் கி பாத் நிகழ்ச்சி.. நாட்டு மக்களிடையே பேசப்போகும் பிரதமர் மோடி..




மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், தற்போது பதட்டப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் கார்கேவின் உடல்நிலை சீராகும் வரை அவர் கண்காணிப்பில் இருப்பார். காய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டறிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனர். கார்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது காங்கிரஸ் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் விரையில் குணமடைய வேண்டும் என தலைவர்கள் பலரும் கூறி வருகின்றனர். மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக உள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர், நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்து வருகிறார். 2022 ஆம் ஆண்டு கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். தனது அரசியல் அனுபவத்தின் மூலம் கட்சியில் சில முக்கிய முடிவுகளை அவர் எடுக்கிறார்.
Also Read : 10,000 மருத்துவ படிப்புக்கான கூடுதல் இடங்கள்.. மத்திய அரசு ஒப்புதல்..
அவரது தொடர் பணியின் காரணமாக, சமீப காலமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடம் முன்பு, ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் ஒரு பேரணியில் உரையாற்றும் போது கார்கேவுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிப்பதற்கு முன்பு, விரைவில் இறக்க மாட்டேன் என்று அவர் கூறினார்