நாட்டில் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து.. தமிழகத்தில் இத்தனையா? தேர்தல் ஆணையம் அதிரடி
Election Commission : நாடு முழுவதும் 808 கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. தேர்தலில் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் போட்டியிடாத 474 அரசியல் கட்சிகளை இரண்டாம் கட்டமாக இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியுள்ளது. இதில் தமிழகத்தில் 47 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெல்லி, செப்டம்பர் 19 : தேர்தலில் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் போட்டியிடாத 474 அரசியல் கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் முதற்கட்டமாக 334 கட்சிகளை நீக்கப்பட்ட நிலையில், இதுவரை மொத்தமாக 808 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் 42 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இன் கீழ் பிரிவு 29A-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் வரி சலுகைகள் போன்றவர்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சட்டத்தின் படி எந்த கட்சியும் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டியிடாத பட்சத்தில், அந்தக் கட்சிகள் பதிவு செய்யப்பட்டதிலிருந்து நீக்கப்படுகிறது.
எனவே தற்போது தேர்தல் ஆணையம் நடவடிக்கை தீவிரப்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஆய்வுகள் நடத்தப்பட்டு தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை நீக்கி வருகிறது தேர்தல் ஆணையம். ஏற்கனவே முதற்கட்டமாக 2025 ஆகஸ்ட் மாதம் 334 கட்சிகளை தேர்தல் நாணயம் நீக்கி இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது 474 கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது ஆக மொத்தமாக நாட்டில் 88 கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத 808 கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கி இருக்கிறது.




Also Read : பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து நிகழ்ச்சி.. வைரலான போஸ்டர்.. அதிரடி காட்டிய போலீஸ்!
தேர்தல் ஆணையம் அதிரடி
Cleaning up of the Electoral System Continues
✅ ECI delists another 474 RUPPs
✅ Starts proceedings to delist 359 more RUPPsRead more : https://t.co/qy1yyMZf6p pic.twitter.com/T6J4drJVI7
— Election Commission of India (@ECISVEEP) September 19, 2025
இரண்டாம் கட்டத்தில், உத்தரபிரதேசத்தில் அதிக கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் 121 கட்சிகளும், மகாராஷ்டிராவில் 44 கட்சிகளும், தமிழகத்தில் 42 கட்சிகளும், டெல்லியில் 40 கட்சிகளும், பஞ்சாபில் 21 கட்சிகளும், மத்திய பிரதேசத்தில் 23 கட்சிகளும், பீகாரில் 15 கட்சிகளும், ராஜஸ்தானில் 17 கட்சிகளும், ஆந்திராவில் 17 கட்சிகளும் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. தொடர்ந்து, 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல்களில் போட்டியிட்ட 359 கட்சிகளை ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.
Also Read : நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்களை காப்பாற்றி Swiggy, Zomato ஊழியர்கள்.. ஹைதராபாத் இளைஞர் நெகிழ்ச்சி பதிவு!
2021-22, 2022-23, 2023-24 ஆகிய மூன்று நிதியாண்டுக்கான தணிக்கை கணக்குகள் சமர்ப்பிக்காதது, தேர்தலில் போட்டியிட்டும் செலவின அறிக்கைகளை தாக்கல் செய்தாதது போன்ற காரணங்களால் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த 359 கட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியர் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் காரணம் கூற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகு அந்த கட்சிகள் விளக்கம் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.