இந்து பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்.. மனிதநேயத்துக்கு மதம் ஒரு தடையில்லை!
Muslim Man Performs Hindu Last Rites For Hindu Woman | கேரளாவில் கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இந்து பெண் உயிரிழந்த நிலையில், அவருக்கு இஸ்லாமியர் ஒருவர் இந்து முறைப்படி இறுதி சடங்குகளை செய்து முடித்துள்ளார்.

கேரளா, செப்டம்பர் 18 : கேரளாவில் (Kerala) உள்ள ஒரு கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த இந்து மதத்தை சேர்ந்த பெண் உயிரிழந்த நிலையில், ஷபீர் என்ற இஸ்லாமியர் அவருக்கு உறவாக இருந்து இந்து முறைப்படி இறுதி சடங்குகளை செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு தனது மரணத்திற்கு பிறகு இந்து முறைப்படி இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்ற கடைசி ஆசை இருந்த நிலையில், அதனை நிறைவேற்றும் விதமாக அவர் இவ்வாறு செய்துள்ளார். அந்த நபரின் இந்த செயலுக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்து பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கடினம்குளம் கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் இந்து பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 44 வயதான ராக்கி என்ற அந்த பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படும் அந்த மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், ராக்கி தான் இறந்த பிறகு தனக்கு இந்து முறைப்படி இறுதி சடங்கு நடத்த வேண்டும் என்று கன்னியாஸ்திரிகளிடம் தனது கடைசி ஆசை குறித்து கூறியுள்ளார்.




இதையும் படிங்க : இது என்ன புதுசா இருக்கு? மனிதர்களை கடிக்கும் தெரு நாய்க்கு ஆயுள் தண்டனை.. வினோத உத்தரவு
பெண்ணின் கடைசி ஆசையை நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவர்
A story of humanity from Kerala: 44-year-old Rakhi, abandoned & battling cancer, wished for a Hindu funeral. With no relatives to claim her, Muslim panchayat member T. Safeer stepped in, performing her last rites like a son. Compassion, not religion, defined her farewell. #Kerala… pic.twitter.com/u49gVTVFRr
— Mojo Story (@themojostory) September 18, 2025
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ராக்கி திடீரென உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்ட நிலையில், சஃபீர் என்ற இஸ்லாமியர் தானே முன்வந்து அவருக்கு இந்து முறைப்படி இறுதி சடங்குகளை செய்துள்ளார். இந்து பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்ய இஸ்லாம் மதம் தனக்கு தடையாக இருக்கவில்லை என்று சஃபீர் தெரிவித்துள்ளார். சஃபீர் அந்த பகுதியின் பஞ்சாயத்து தலைவராக உள்ள நிலையில், அவர் தானே முன்வந்து இந்த செயலை செய்தது அந்த பகுதி மக்களிடையே அவருக்கு பாராட்டை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.