Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Earthquake : மணிப்பூர், ஹரியானாவை உலுக்கிய நிலநடுக்கம்.. பொதுமக்கள் பீதி!

Haryana and Manipur Earthquakes | ஹரியான மற்றும் மணிப்பூர் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (செப்டம்பர் 26, 2025) மாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலை 1.47 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.

Earthquake : மணிப்பூர், ஹரியானாவை உலுக்கிய நிலநடுக்கம்.. பொதுமக்கள் பீதி!
நிலநடுக்கம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Sep 2025 07:37 AM IST

சென்னை, செப்டம்பர் 27 : ஹரியானா (Haryana) மற்றும் மணிப்பூரில் (Manipur) ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. முன்னதாக மணிப்பூரில் நேற்று (செப்டம்பர் 26, 2025) நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து ஹரியானாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹரியானா மற்றும் மணிப்பூரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம்

மணிப்பூரின் சாண்டல் பகுதியில் நேற்று (செப்டம்பர் 26, 2025) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சரியாக மாலை 6.59 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.26 டிகிரி வடக்கு அட்சரேகையில் 94.12 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையில் இருக்கும் என தேசிய நிலநடுக்கவியல் மையம் கணித்துள்ளது.

இதையும் படிங்க : லடாக்கில் வெடித்த வன்முறை.. பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு.. என்ன நடக்கிறது?

தேசிய நிலநடுக்கவியம் மையம்

ஹரியானாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் இன்று (செப்டம்பர் 27, 2025) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.47 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 28.99 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 76.97 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என தேசிய நிலநடுக்கவியம் மையம் கணித்துள்ளது.

இரண்டு பகுதிகளிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளி வராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.