AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பரிசுப் பணத்தை செலவு செய்த தந்தை மீது 10 வயது மகன் வழக்கு.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.. சுவாரஸ்ய சம்பவம்!

10 Year Old Boy Sued Father In China | சீனாவை சேர்ந்த 10 வயது சிறுவன், சந்திர புத்தாண்டு நாளில் தனது உறவினர்கள் தனக்கு வழங்கிய பரிசுப் பணத்தை தனது தந்தை பயன்படுத்தியதற்காக அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

பரிசுப் பணத்தை செலவு செய்த தந்தை மீது 10 வயது மகன் வழக்கு.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.. சுவாரஸ்ய சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Feb 2026 14:42 PM IST

பீஜிங், பிப்ரவரி 27 : சீனாவில் (China) 10 வயது சிறுவன் ஒருவர் தனது பரிசுப் பணத்தை பயன்படுத்தியதற்காக தனது தந்தை மீதே வழக்கு தொடந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், சிறுவன் தனது தந்தை மீது வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் என்ன, சிறுவனின் வழக்கில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பரிசுப் பணத்தை பயன்படுத்தியதற்காக தந்தை மீது சிறுவன் வழக்கு

சீனாவை சேர்ந்த அந்த 10 வயது சிறுவனின் பெற்றோர் விவாகரத்து பெற்ற நிலையில், அவர் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற பாரம்பாரிய சந்திர புத்தாண்டு நிகழ்ச்சிக்காக சிறுவனுக்கு அவரது உறவினர்கள் பரிசுப் பணத்தை அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி, சிறுவனின் வங்கி கணக்கிற்கு 80 ஆயிர யுவான் வந்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.11 லட்சம் ஆகும்.

இதையும் படிங்க : ஏலியன்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட டிரம்ப் உத்தரவு!

சிறுவனின் பரிசு பணத்தை இரண்டாவது திருமணத்திற்காக பயன்படுத்திய தந்தை

சிறுவனுக்காக அவரது உறவினர்கள் அனுப்பிய பணம் அவரது தந்தையின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறுவனின் பணத்தை அவரது தந்தை தனது இரண்டாவது திருமணத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சிறுவன், தனது பரிசுப் பணத்தை திரும்ப பெற வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுவனிடம் இருந்து பெற்ற 80 ஆயிரம் யுவான் பணத்தை திருப்பி தர வேண்டும் என தந்தைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : எகிப்தில் 3,000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் கண்டுபிடிப்பு.. வியப்பூட்டும் தங்க சுரங்கம்!

சீனாவின் மிகவும் பாரம்பரியமான சந்திர புத்தாண்டு நாளில் சீன கலாச்சாரத்தின் படி ஹோங்க்பாவோ எனப்படும் சிவப்பு நிற உறையில் பணம் வைத்து பெரியவர்கள், சிறுவர்களுக்கு பரிசு வழங்குவது வழக்கம். அவ்வாறு தனக்கு வழங்கப்பட்ட பரிசு பணத்தை தனது தந்தை அவரது இரண்டாவது திருமணத்திற்கு செலவு செய்த நிலையில், 10 சிறுவன் நீதிமன்றத்திற்கு சென்று அந்த பணத்தை திரும்ப பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us