Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மனைவியின் தங்கையை 2வது மனைவியாக்க தீரா ஆசை.. 2 கொலைகளில் முடிந்தது எப்படி?

Man Demands to Marry Wife's Sister as Second Wife | குஜராத்தில் அக்காவை திருமணம் செய்த நபர் அவரது தங்கையை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அந்த பெண் உட்பட இரண்டு கொலைகளை அரங்கேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் தங்கையை 2வது மனைவியாக்க தீரா ஆசை.. 2 கொலைகளில் முடிந்தது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Oct 2025 21:08 PM IST

சூரத், அக்டோபர் 10 : குஜராத்தில் (Gujarat) மனைவியின் சகோதரியை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் ஒருவர் அந்த பெண் மற்றும் அவரது சகோதரரை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்களாக அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி அவர் மனைவியின் குடும்பத்தாரை தொந்தரவு செய்து வந்த நிலையில், இந்த கொடூர சம்பவத்தை அவர் அரங்கேற்றியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனைவியின் தங்கையை இரண்டாவதாக திருமணம் முயன்ற நபர்

குஜராத் மாநிலம், சூரத் நகரை சேர்ந்தவர் ஜவுளிக்கடை உரிமையாளரான சந்தீப் கவுட். இவருக்கு திருமணமாகி வர்ஷா என்ற மனைவி உள்ளார். வர்ஷாவுக்கு நிஸ்சய் காஷ்யப், மம்தா காஷ்யப் என்ற சகோதரர் மற்றும் சகோதரி இருந்தனர். நிஸ்சய் காஷ்யப்புக்கு டிசம்பர் மாதம் திருமணம் செய்து வைப்பதற்காக குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் குடும்பத்துடன் சூரத் நகருக்கு வந்துள்ளனர்.

இதையும் படிங்க : திருமணமான 4 மாதம்.. மனைவியை கொன்ற கணவன்.. படுக்கைக்கு அடியில் கிடந்த சடலம்

துணி எடுக்க வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தீப்

சந்தீப் ஏற்கனவே தனது மனைவியின் தங்கையான மம்தாவை இரண்டாவது மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்துள்ளார். இது குறித்து அவர் பலமுறை மனைவியின் குடும்பத்தாரிடம் பேசியுள்ளார். ஆனால், அவர்கள் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான் துணி எடுக்கவந்தவர்களிடம் அவர் மீண்டும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க : இரவில் நாகினி பாம்பாக மாறும் மனைவி.. அதிர்ந்த கணவர்.. வினோத சம்பவம்!

கத்தியால் குத்தியதில் உயிரிழந்த நிஸ்சய் மற்றும் மம்தா

இது தொடர்பாக அவர்களுக்கும் சந்தீப்புக்கு இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சந்தீப் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் நிஸ்சய் காஷ்யப் மற்றும் அவரது தங்கை மம்தா காஷ்யப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அவர்களது தாய் சகுந்தலா தேவி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தீப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.