Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெண்களுக்கு குட் நியூஸ்.. 12 நாட்கள் சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு.. அதிரடி நடவடிக்கை!

Karnataka Menstraul Leave : கர்நாடகாவில் பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் விடுப்பு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், பெண்கள் ஆண்டுக்கு 12 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவில் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் எப்போது கொண்டு வரப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெண்களுக்கு குட் நியூஸ்.. 12 நாட்கள் சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு.. அதிரடி நடவடிக்கை!
மாதவிடாய் விடுப்பு
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 10 Oct 2025 11:23 AM IST

கர்நாடக, அக்டோபர் 10 : கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அனைத்து பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர். பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் மாதவிடாய் விடுமுறை இருக்கும் நிலையில், இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களில் அதனை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது. ஏற்கனவே பீகார், கேரள, ஒடிசா மாநிலங்களில் ஆண்டுகளுக்கு ஊதியத்துடன் 12 நாட்கள் மாதவிடாய் விடுப்பு பெண்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் அதனை அமல்படுத்த அம்மாநில அருசு முயற்சி மேற்கொண்ட வருகிறது.

அந்த வகையில், 2025 அக்டோபர் 9ஆம் தேதியான நேற்று கர்நாடக அரசு பெண்கள் நலன் மற்றும் பணியிடங்களில் அனைவரையும் உள்ளடக்கிய சூழலை மேம்படுத்தும் நோக்கியில், மாதவிடாய் விடுமுறை கொள்கை 2025-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கையின் கீழ், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், ஆடைத் தொழில்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் மற்றும் பிற தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இந்தக் கொள்கை பொருந்தும்.

Also Read : இறக்குமதி செலவு கம்மி.. வேலைவாய்ப்பு அதிகம் – பிரதமர் மோடி சொன்ன பாசிட்டிவ் விஷயங்கள்!

சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு


இந்த கொள்கை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட 6 மாதவிடாய் விடுமுறை என்ற திட்டத்தில் இருந்து தற்போது ஆண்டுக்கு 12 மாதவிடாய் விடுப்பு பெண்களுக்கு வழங்கப்படும் வகையில், இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், “பெண்களுக்கான மாதவிடாய் விடுப்புக்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம். இது நாங்கள் கொண்டு வந்த மிகவும் முற்போக்கான புதிய சட்டம். பெண்கள் ஒரு வருடத்திற்கு 12 அனுமதிக்கப்பட்ட விடுப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.

Also Read : அமீபா தொற்றால் சிறுமி பலி… ஆத்திரத்தில் டாக்டரை வெட்டிய தந்தை… கேரளாவில் ஷாக்

மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஒரே நேரத்தில் தாங்கள் மாதவிடாய் சுழற்சியின்படி, எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பெண்களின் நலனின் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு முற்போக்கான அரசாங்கத்திற்கு இது ஒரு சிறப்பம்சமாகும்” என்றார். தமிழகத்தின் அண்டை மாநில கர்நாடக, கேரள மாநிலத்தில் மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு எப்போது மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என்ற கேள்வி பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.