Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமீபா தொற்றால் சிறுமி பலி… ஆத்திரத்தில் டாக்டரை வெட்டிய தந்தை… கேரளாவில் ஷாக்

Kerala Doctor Attack : கேரளா மாநிலத்தில் மூளையை தின்னும் அமீபா தொற்றால் சிறுமி உயிரிழந்தார். இதனால் ஆத்திரத்தில் சிறுமியின் தந்தை மருத்துவரை அரிவாளால் வெட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் படுகாயம் அடைந்த மருத்துவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமீபா தொற்றால் சிறுமி பலி… ஆத்திரத்தில் டாக்டரை வெட்டிய தந்தை… கேரளாவில் ஷாக்
மருத்துவரை தாக்கிய நபர்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 09 Oct 2025 10:12 AM IST

கேரளா, அக்டோபர் 09: மூளையை தின்னும் அமீபா தொற்றால் சிறுமி உயிரிழந்ததால், ஆத்திரத்தில் மருத்துவரை சிறுமியின் தந்தை வெட்டியுள்ளார். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கேராளவில் மூளையை தின்னும் அமீபா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இது primary amoebic meningoencephalitis என சொல்லப்படுகிறது. 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இந்த தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில்,  அடுத்தடுத்து பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கோழிக்கோடு தாமரச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அமீபா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்தார். இதனை அடுத்து, அந்த மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவரை உயிரிழந்த சிறுமியின் தந்தை வெட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. தாமரச்சேரிக்கு அருகிலுள்ள கோரங்காட்டைச் சேர்ந்தவர் கே.வி.சுனூப்.

இவருக்கு எட்டு வயதில் அனயா என்ற மகள் உள்ளார். இவருக்கு ஆரம்பத்தில் காய்ச்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து, தாமரச்சேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிறுமியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. இதனால், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு முடிவு செய்தனர். ஆனால், அதற்கு சிறுமி உயிரிழந்தார். இதனை அறிந்த சிறுமியின் தந்தை சுனூப் கதறி அழுதுள்ளார். மேலும், சிறுமிக்கு சிசிச்சை அளித்த மருத்துவர் விபினை அவர் அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் மருத்துவர் விபினுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Also Read : திருமணமான 4 மாதம்.. மனைவியை கொன்ற கணவன்.. படுக்கைக்கு அடியில் கிடந்த சடலம்

டாக்டரை வெட்டிய தந்தை

சுனூப் மீது பாரதீய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 118(2) (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 109(1) (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  பின்னர் மருத்துவரை தாக்கிய சுனூப் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்த தாக்குதல் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதற்கிடையில், பின்னர் டாக்டர் விபினுக்கு ஆரம்ப மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Also Read : சிறுவனுக்கு கத்திக்குத்து.. தலைமைக் காவலர் வெறிச் செயல்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி

மருத்துவர் விபினுக்கு தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. மருத்துவர் விபின் தற்போது நரம்பியல் துறையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் உள்ளார். மருத்துவமனை தாக்குதல்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.