”நீங்கள் தான் என் குடும்பம்” – கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி..
PM Modi Celebrating Diwali: 2025 ஆம் ஆண்டு பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா தரப்பில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மேற்கொள்ளப்பட்டது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஆண்டின் தீபாவளியை கோவாவில் இருக்கும் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்தார்.

அக்டோபர் 20, 2025: 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து தீபாவளி பண்டிகையை ராணுவத்தினருடன் கொண்டாடுவதையே வழக்கமாக கடைபிடித்து வருகிறார். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். 2025 ஆம் ஆண்டு பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா தரப்பில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மேற்கொள்ளப்பட்டது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஆண்டின் தீபாவளியை கோவாவில் இருக்கும் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்தார்.
“நீங்கள்தான் என் குடும்பம்” – பிரதமர் மோடி:
People love celebrating Diwali with their families. And so do I, which is why every year I meet our army and security personnel who keep our nation safe. Happy to be among our brave naval personnel on the western seaboard off Goa and Karwar on Indian Naval Ships with INS Vikrant… pic.twitter.com/Pb41kQnMMR
— Narendra Modi (@narendramodi) October 20, 2025
“எல்லோரும் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாட விரும்புகிறார்கள். நான் உங்களை என் குடும்பமாகவே கருதுகிறேன். அதனால்தான் நான் உங்களுடன் பண்டிகையை கொண்டாட வந்துள்ளேன். இந்த தீபாவளி எனக்கு மிகவும் சிறப்பானது. உங்களுடன் இங்கே இருப்பதில் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. உங்கள் உற்சாகத்தையும் தேசபக்தியையும் பார்த்த பிறகு நான் மிகவும் திருப்தி அடைகிறேன். வழக்கமாக நான் சீக்கிரம் தூங்குவதில்லை, ஆனால் நேற்று சீக்கிரம் தூங்கிவிட்டேன்,” என தெரிவித்தார்.
வீரர்கள் மேற்கொள்ளும் கஷ்டங்கள் வார்த்தைகளால் முடியாது:
Highlights from INS Vikrant, including the Air Power Demo, a vibrant cultural programme and more… pic.twitter.com/Br943m0oCC
— Narendra Modi (@narendramodi) October 20, 2025
வீரர்கள் தேசபக்தி பாடல்களைப் பாடி, அவற்றில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி விளக்கியதைப் பார்த்த பிரதமர், “போர்க்களத்தில் வீரர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது,” என்று உணர்ச்சி வசப்பட்டு கூறினார்.
Also Read: ”Vocal For Local”.. இந்திய தயாரிப்புகளை வாங்கி மகிழுங்கள்.. தீபாவளி வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி..
நமது நாட்டின் வலிமையையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும் வகையில் பணியாற்றும் கடற்படையைப் பாராட்டிய பிரதமர் மோடி, “கடலில் சூரியஒளி, வீரர்கள் ஏற்றும் விளக்குகளைப் போல பிரகாசிக்கிறது. அவர்களின் துணிச்சல் எனக்கு பெருமை,” என்றும் கூறினார்.
அதேவேளை, “ஆபரேஷன் சிந்தூர் நடந்த போது, அது பாகிஸ்தானை சில நாட்களுக்குள் மண்டியிட வைத்தது. முப்படைகளுக்கிடையிலான சிறந்த ஒருங்கிணைப்பே பாகிஸ்தானை போரில் தோற்கடித்தது,” என்றும் தெரிவித்தார்.