Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டெல்லியில் சொதப்பிய செயற்கை மழை கான்செப்ட்.. தோல்விக்கு காரணம் சொன்ன ஐஐடி!

Cloud Seeding in Delhi: செயற்கை முறையில் மழையை வரவழைக்கும் முயற்சியாக மேக விதைப்பு முயற்சி டெல்லியில் மேற்கொள்ளப்பட்டது. மேகத்தில் விமானம் மூலம் சில்வர் அயோடைடு (silver iodide) மற்றும் உப்பை தூவுவதன் மூலம் மழை வரும் எனத் தெரிகிறது. உலகில் தற்போது பல்வேறு நாடுகளிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

டெல்லியில் சொதப்பிய செயற்கை மழை கான்செப்ட்.. தோல்விக்கு காரணம் சொன்ன ஐஐடி!
கோப்புப் படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Oct 2025 14:38 PM IST

டெல்லி, அக்டோபர் 29: டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியாக மேக விதைப்பு (Cloud Seeding) மூலம் செயற்கை மழை பெய்விக்க எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. டெல்லியில் காற்று மாசுப்பாடானது கட்டுப்படுத்த முடியாத அளவில் இருந்து வருகிறது. அதிக மக்கள் தொகை காரணமாகவும், அளவுக்கு மீறிய வாகன பயன்பாடு போன்ற பல்வேறு காரணிங்களாலும், அங்கு காற்று மாசடைந்து உள்ளது. இதனால், மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். சுவாசிப்பிரச்சனை காரணமாக டெல்லியில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம் சராசரியை விட 11 ஆண்டுகள் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக தீபாவாளி கொண்டாட்டத்திற்கு பிறகு காற்று மேலும் மாசடைந்ததுள்ளது. எனவே, காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த அம்மாநில அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

Also read: 8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!!

மேக விதைப்பு மூலம் செயற்கை மழைக்கு முயற்சி:

அந்தவகையில், காற்று மாசை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக மேக விதைப்பு (Cloud Seeding) மூலம் மழை செயற்கை பெய்விக்க டெல்லி அரசு முடிவு செய்தது. இதற்கான ஆராய்ச்சியில் ஐஐடி கான்பூர் (IIT Kanpur) ஈடுபட்டு வந்தது. நேற்று டெல்லியில் முதல் கட்ட மேக விதைப்பு மூலம் மழை பெய்விக்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆனால், அந்த முயற்சி வெற்றிகரமாக அமையவில்லை.

மேக விதைப்பு முயற்சி தோல்வியடைந்தது ஏன்?

இதுகுறித்து ஐஐடி கான்பூர் (IIT Kanpur) முதல்வர் மனிந்த்ரா அகர்வால் பேசுகையில், மேக விதைப்பு மூலம் மழை பெய்விக்கும் முயற்சி செய்து பார்க்கப்பட்டது. ஆனால், அந்த சோதனை வெற்றியடையவில்லை. அதற்கு காரணம், மேகத்தின் ஈரப்பதம் வெறும் 15-20% தான் இருந்தது. மேக விதைப்பு மூலம் மாசினை முழுவதுமாக ஒழித்துவிட முடியாது. ஆனால், இது ஒருவகையில் உதவி செய்யும் என்றார்.

செயற்கை மழை சோதனை கைவிடப்படாது:

மேலும், மேக விதைப்பில் 20% சில்வர் அயோடைடு (silver iodide) மற்றவை சாதாரண உப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மேகத்தில் 14 முறை தூவப்பட்டும் மழை பெய்யவில்லை. இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும். இது மாசுபாட்டிற்கான நிரந்தர தீர்வாக அமையாது. மாசினை கட்டுப்படுத்த வேண்டுமானால், அதற்கான மூல காரணங்களை தான் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி கட்டுப்படுத்தி விட்டால், மேக விதைப்பு தேவை இருக்காது. அதுவரை, இந்த மேக விதைப்பு மாசினை கட்டுப்படுத்த உதவி செய்யும். இதற்காக உத்திர பிரதேசத்திலிருந்து விமானங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. பணச் செலவு சற்று அதிகம் தான் இருப்பினும் இது மக்களுக்கு மாசினை கட்டுப்படுத்தி பயனளிக்கும் எனக் கூறினார்.

Also read: VIDEO: ரஃபேல் போர் விமானத்தில் பறந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு!

மேக விதைப்பு குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பேசுகையில், டெல்லி போன்ற பெருநகரில் இருக்கும் காற்று மாசினை கட்டுப்படுத்துவது அவசியமான ஒன்று. அதற்காக எடுக்கப்படும் முயற்சியில் மேக விதைப்பும் ஒன்று. இதன் மூலம் பெய்யும் மழை நிச்சயம் காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் என்று நம்புகிறோம். இந்த சோதனை வெற்றி பெற்றால் காற்று மாசுபாட்டிலிருந்து நாங்கள் மீண்டு வர முடியும் எனக் கூறினார்.