OnePlus 15 : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஒன்பிளஸ் 15.. முழு விவரம் இதோ!
OnePlus 15 Launched in China | ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், பட அட்டகாசமான அம்சங்களுடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் ஒன்பிளஸ் (OnePlus). இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை (OnePlus 15 Smartphone) சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 Chipset) அம்சம் உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம்
இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது மூன்று கேமரா செட் அப்களை கொண்ட ஸ்மார்ட்போன் ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து கேமராக்களும் 50 மெகாபிக்சல் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமரா 32 மெகாபிக்சல் அம்சத்தை கொண்டுள்ளது. இது 7,300 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 120 வாட்ஸ் வயர்டு மற்றும் 50 வாட்ஸ் வயர்லஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : Redmi K90 Pro Max : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ்!
விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
OnePlus 15 pic.twitter.com/jlddiEBCzh
— OnePlus Club (@OnePlusClub) October 27, 2025
12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 3,999 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.50,000 ஆகும். இந்த ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் IQOO ஸ்மார்ட்போனை விட அதிக சிறப்புகள் கொண்டதாக உள்ளது. இந்த IQOO ஸ்மார்ட்போன் சீனாவில் 4,199 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.52,000 ஆகும்.
இதையும் படிங்க : Realme GT 8 Pro : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி ஜிடி 8 ப்ரோ!
விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ஒன்பிளஸ் 15
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் எந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் என்பது குறித்து அந்த நிறுவனம் இதுவரை எந்த வித அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.73,000-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதே விலைக்கு ஒன்பிளஸ் 15 அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 15 தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாத இடையில் இந்தியா உள்ளிட்ட உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.