Realme GT 8 Pro : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி ஜிடி 8 ப்ரோ!
Realme GT 8 Pro Smartphone Introduced | ரியல்மி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் ரியல்மி (Realme). இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனை (Realme GT 8 Pro Smartphone) சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனி விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சீனாவில் அறிமுகமானது ஜிடி 8 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்
- இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் QHD + AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எக்ஸ்ட்ரீம் எடிஷன் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போனில் 7,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 120 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை, பச்சை மற்றும் நீல நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Emergency Call மூலம் ஒரு உயிரையே காப்பாற்றலாம்.. எப்படி தெரியுமா?




ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
realme GT8 Pro launched in China.
Here are the details:
Display and Design
– 2K 144Hz BOE Sky Screen Display
– 3200Hz instantaneous touch sampling rate
– 360Hz four-finger sampling rate
– 7000 nits peak brightness
– 2000 nits global peak brightness
– Full-brightness… https://t.co/MlHtqOhtiI pic.twitter.com/hkaeZ2gUj1— Mukul Sharma (@stufflistings) October 21, 2025
12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 3,999 யென் ஆக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.49,000 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் அதிக வேரியண்ட் ஸ்மார்ட்போன் ஆன 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 5,199 யென் ஆக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.64,200 ஆகும்.
இதையும் படிங்க : முதலீட்டு மோசடியில் சிக்கிய நிதி நிறுவன மேலாளர்.. ரூ.5 கோடி பணத்தை இழந்த அதிர்ச்சி!
இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகமாகியுள்ள நிலையில், விரைவில் இந்தியாவில் அறிமுமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.