இனி ஆப்பிள் வாட்சிலும் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்.. மெட்டா அசத்தல் அறிவிப்பு!
WhatsApp on Apple Watch | இதுவரை பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை ஐபோன்களில் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், ஐபோன் பயனர்களுக்காக மெட்டா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி ஆப்பிள் வாட்சிலும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம் என அது கூறியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. ஏற்கனவே இதற்கு ஏராளமான பயனர்கள் உள்ள நிலையில், மேலும் புதிய பயனர்களை இணைக்கும் வகையில் அந்த நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான் ஐபோன் (iPhone) பயனர்களுக்கு பயனளிக்கு வகையில் புதிய அறிவிப்பு ஒன்றினை மெட்டா வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐபோன் பயனர்களுக்கு புதிய அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட மெட்டா
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் நிலையில், குறிப்பிட்ட அளவு பொதுமக்கள் ஐபோன்களை பயன்படுத்துகின்றனர். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இவை இரண்டு வெவ்வேறு அம்சங்களை கொண்டுள்ளன. குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செய்யும் சில விஷயங்களை ஐபோன்கள் மூலம் செய்ய முடியாது. ஐபோனில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக இருப்பதனால் சில செயலிகளை கூட ஐபோனில் பதிவேற்றம் செய்ய முடியாது.
இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப் சாட் பேக் அப்பில் வந்த அசத்தல் அம்சம்.. என்ன தெரியுமா?
இனி ஆப்பிள் வாட்ச்சில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம்
இதுவரை வாட்ஸ்அப் செயலியை ஐபோனில் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆப்பிள் வாட்ச்சில் (Apple Watch) வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது ஆப்பிள் வாட்ச்சில் உரையாடல்களை மேற்கொள்வது, குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிப்பது மற்றும் கையில் கட்டிக்கொண்டு இருக்கும் வாட்சை பயன்படுத்தியே பேச முடியும் என கூறியுள்ளது.
இதையும் படிங்க : GPS : ஜிபிஎஸ் மூலம் ஒருவர் என்ன செய்கிறார் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.. எச்சரிக்கும் ஐஐடி ஆய்வு!
வாட்ஸ்அப் செயலியை ஐபோன் வாட்ச்சில் பயன்படுத்தும் நிலையில், ஆரம்பக்கட்டத்தில் அது ஸ்மார்ட்போன் உடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என மெட்டா தெரிவித்துள்ளது. பயனர்கள் வாட்ஸ்அப் செயலி லாக் இன் செய்யப்பட்டு இருக்கும் ஸ்மார்ட்போன் இல்லாமல் வெறும் ஐபோன் வாட்சில் மட்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்த வேண்டும் என நினைத்தால் அது முடியாது என்று மெட்டா கூறியுள்ளது.