ஐபோன் Vs ஆண்ட்ராய்டு.. இரண்டில் எது பாதுகாப்பானது?.. ஷாக் கொடுத்த ஆய்வு முடிவுகள்!
Android Smartphone Vs iPhone | பெரும்பாலான நபர்கள் ஐபோன்கள் தான் மிகவும் பாதுகாப்பனவை என நினைக்கின்றனர். ஆனால், சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று அதனை பொய்யாக்கியுள்ளது. அதாவது ஐபோன் பயனர்கள், ஆண்ட்ராய்டு பயனர்களை விட அதிக மோசடிகளை எதிர்க்கொள்வதாக கூறியுள்ளது.
                                தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்துகின்றனர். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைவரும் தங்களது தனிப்பட்ட, வேலை, கல்வி என பல தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். தற்போது பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் கூட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இவ்வாறு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் நபர்கள் அவர்களது விருப்பத்திற்கு மற்று பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்கின்றனர்.
ஐபோன்களை பாதுகாப்பாக கருதும் பொதுமக்கள்
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஸ்மார்ட்போன் பயனர்களை ஆண்ட்ராய்டு (Android) பயனர்கள், ஐபோன் (iPhone) பயனர்கள் என இரண்டு வகைப்படுத்தலாம். ஐபோன் விலை அதிகமாக இருக்கும் என்பதால் பெரும்பாலான மக்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். ஐபோன்களின் விலை அதிகமாக இருந்தாலும், அதில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளன என பலர் ஐபோன்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், சமீபத்தில் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி ஐபோன் பயனர்களை கடும் அதிர்ச்ச்யில் ஆழ்த்தியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : இந்த 5 வழிகள் மூலம் வாட்ஸ்அப்பில் ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம் – எப்படி தெரியுமா?




ஆண்ட்ராய்டு Vs ஐபோன் – அதிக மோசடிகள் நடைபெறுவது எதில்?
பெரும்பாலான நபர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருக்கும், அதனால் தான் பாதுகாப்பு கருது ஐபோனை பயன்படுத்துவதாக கூறுவர். ஆனால், இத்தனை நாட்கள் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த கருத்தை சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றின் முடிவுகள் பொய்யாக்கியுள்ளன. அதாவது, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டில் எதில் பயனர்கள் அதிக அளவிலான மோசடிகளை எதிர்க்கொள்கின்றனர் என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் எதிர்பாராத விதமாக ஐபோன் பயனர்கள் தான் அதிக மோசடிகளில் சிக்குவதாக தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : இனி ஆப்பிள் வாட்சிலும் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்.. மெட்டா அசத்தல் அறிவிப்பு!
ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?
கூகுள் (Google) மற்றும் யோவ்கோவ் (YovGov) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை சேர்ந்த பொதுமக்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியா மற்றும் பிரேசிலில் இருந்து சுமார் 5,000 ஸ்மார்ட்போன்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வு முடிவில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது பெரும்பாலான் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களுக்கு இதுவரை எந்தவிதமான ஸ்பேம் மற்றும் மோசடி குறுஞ்செய்திகள் வந்ததில்லை என கூறியுள்ளனர். ஆனால், ஐபோன் பயனர்கள் 58 சதவீதம் பேர் மோசடி குறுஞ்செய்திகளை பெற்றுள்ளதாக கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.