AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்கள் குழந்தை பருவத்துடன் நீங்கள் சந்தித்து பேசலாம் – சமூக வலைதள Baby me Treand – எப்படி உருவாக்குவது?

“Meet Your Younger Self : நம் குழந்த பருவத்துடன் உரையாடும் Baby Me என்ற டிரெண்ட் இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்துள்ளது. நம் குழந்தைப் பருவப் புகைப்படம் ஒன்றையும், தற்போதைய புகைப்படம் ஒன்றையும் நாம் வழங்கினால், ஏஐ அவற்றை ஒன்றிணைத்து ஒரே ஃபிரேமிற்குள் கொண்டுவருகிறது.

உங்கள் குழந்தை பருவத்துடன் நீங்கள் சந்தித்து பேசலாம் – சமூக வலைதள Baby me Treand – எப்படி உருவாக்குவது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Apr 2026 21:39 PM IST

சமூக ஊடகங்களில் நீங்கள் எங்கு பார்த்தாலும் பழைய நாம் மற்றும் புதிய நாம் என்ற பதிவுகளே அதிகம் தென்படுகின்றன. டைம் டிராவல் செய்யாமலேயே நம் குழந்தைப் பருவத்துடன் உரையாடவும் முடியும். இதற்கு செயற்கை நுண்ணறிவு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. சாட்ஜிபிடி மற்றும் Gemini போன்ற ஏஐ தளங்களில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சங்களே, இந்த சமூகவலைதலங்களில் இந்த டிரெண்டிற்கு காரணமாக அமைந்துள்ளன. அதாவது நாம் நம் குழந்தை பருவத்துடன் சந்திப்பது போல அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் குழந்தை பருவத்துடன் நீங்கள் சந்தித்து பேசலாம்

நம் குழந்தைப் பருவப் புகைப்படம் ஒன்றையும், தற்போதைய புகைப்படம் ஒன்றையும் நாம் வழங்கினால், ஏஐ அவற்றை ஒன்றிணைத்து ஒரே ஃபிரேமிற்குள் கொண்டுவருகிறது. இது வெறும் ஒரு புகைப்படமாக மட்டும் இல்லாமல், நாம் குழந்தையாக இருந்தபோது நம்முடன் நாமே எப்படிப் பேசிக்கொண்டிருப்போம் என்பதையோ, அல்லது இருவரும் அருகருகே அமர்ந்து பிறந்தநாளைக் கொண்டாடுவது போன்றோ இந்தப் படங்கள் உருவாக்கப்படுகின்றன. வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல, நீ கவனமாக இருக்க வேண்டும் “அழாதே,” “உனக்கு முன்னால் ஒரு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” போன்ற உணர்வுபூர்வமான வாசகங்களுடன் பலரும் இந்த போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க : கோடைகாலத்தில் வெப்பமடையும் ஸ்மார்ட்போன்கள் – இதை கவனிக்கலனா ஆபத்து!

இந்தப் படங்கள் பலருக்கும் உணர்ச்சிரரமான தருணமாக மாறியுள்ளது. குழந்தையாக இருந்தபோது எப்போது வளர்ந்து பெரியவராவோம் என்று ஏங்கிய தங்கள் குழந்தைப் பருவத்தை அவர்கள் நினைவுகூருகிறார்கள். சிலர் கேள்வி எழுப்பினாலும், கோடிக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைப் பருவ வடிவத்தைத் தாங்களே கையில் ஏந்தியிருப்பது போன்ற படங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

எப்படி ஒரு ‘Baby Me’ படத்தை உருவாக்குவது?

Gemini அல்லது ChatGPT ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் குழந்தையாக இருந்தபோது எடுக்கப்பட்ட தெளிவான புகைப்படம் ஒன்றையும், தற்போதைய புகைப்படம் ஒன்றையும் அப்லோட் செய்யவும். அதற்கு நாம் பிராம்ப்ட்டை சரியாக வழங்க வேண்டும். அதாவது நம் குழந்தை பருவ நம்மையும், இப்போது இருக்கும் நம்மையும் அருகருகே அமர்ந்து உரையாடிக்கொண்டிருப்பது போன்ற ஒரு இமேஜை உருவாக்கி கொடு என டைப் செய்து அனுப்புங்கள். சில வடிவங்களில் இமேஜ் உருவாக்கி கொடுக்கும்.

இதையும் படிக்க : செப்டம்பர் முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. அதிரடி அறிவிப்பு!

தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இது டிரெண்டாகி வருகிறது. மனித உணர்வுகளை தொடுகின்றன சம்பவமாக இது பார்க்கப்படுகிறது. டைம் டிராவல் செய்யாமலேயே நாம் நம் குழந்தை பருவத்துடன் சமமாக உட்கார்ந்து பேசுவது போன்று சுவாரசியமான தருணமாக பார்க்கப்படுகிறது

 

Follow Us