AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்களுக்கு NDMA-ல் இருந்து எச்சரிக்கை வந்ததா?.. கவலைப்பட வேண்டாம்.. இதுதான் காரணம்!

National Disaster Management Authority | இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில், புதிய அம்சம் ஒன்றை மத்திய அரசு சோதனை செய்து வருகிறது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக சில பொதுமக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை அனுப்பியுள்ளது.

உங்களுக்கு NDMA-ல் இருந்து எச்சரிக்கை வந்ததா?.. கவலைப்பட வேண்டாம்.. இதுதான் காரணம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 May 2026 13:38 PM IST

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் (NDMA – National Disaster Management Authority) இருந்து சில பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை கண்டு சிலர் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், பொதுமக்கள் அந்த குறுஞ்செய்தி குறித்து அச்சமடைய தேவை இல்லை. காரணம், இயற்கை பேரிடர்கள் குறித்து எச்சரிக்கும் புதிய அம்சத்தை அரசு சோதனை செய்து வருகிறது. இதன் காரணமாகவே சிலருக்கு இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இயற்கை பேரழிவுகள் குறித்து எச்சரிக்கும் புதிய அம்சம்

இயற்கை பேரழிவுகள் குறித்து எச்சரிக்கும் “Cell Broadcast Alert” என்ற அம்சத்தை அரசு சோதனை செய்து வருகிறது. அதாவது ஏதேனும் பேரழிவுகள் அல்லது இயற்கை சீர்ரங்கள் ஏற்படும்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் இருந்து பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த அம்சம் தற்போது இந்தியா முழுவதும் பரவலாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த குறுஞ்செய்தியை பெற்றவர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

இதையும் படிங்க : சாராண பேட்டரிக்கும் சிலிகான் பேட்டரிக்கும் உள்ள வித்தியாசம்? எது நல்லது?

எச்சரிக்கை வேண்டாம் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்த ஒரு இயற்கை பேரழிவு நடைபெறுவதற்கு முன்னதாகவும், பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இத்தகைய எச்சரிக்கை செய்திகளை பெற விருப்பம் இல்லை என்றால் Settings பகுதிக்கு சென்று இந்த அம்சத்தை Disable செய்யும் வசதியும் உள்ளது.

இதையும் படிங்க : உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி 20%-க்கு கீழ் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. இல்லை என்றால் சிக்கல்!

எச்சரிக்கை வரும்போது என்ன நடக்கும்

சுனாமி, நிலநடுக்கம், மின்னல் தாக்குதல், ரசாயன சிக்கல்கள் தொடர்பான ஆபத்துகள் குறித்து அரசு குறுஞ்செய்தி மூலம் பொதுமக்களை எச்சரிக்கும். இந்த எச்சரிக்கை வரும்போது பொதுமக்கள் மிக சத்தமான அலாரம் போன்ற ஓசையை கேட்பார்கள். அல்லது எச்சரிக்கை தொடர்பான குறுஞ்செய்திகள் அனுப்பப்படும். இந்த அம்சம் தற்போது சோதனையில் உள்ள நிலையில், அதன் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்துக்கொள்வதற்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு NDMA இடம் இருந்து எச்சரிக்கை குறுஞ்செய்தி பெற்றால் கவலைப்பட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us