ஸ்னாப்சாட்டை காப்பி அடித்த இன்ஸ்டாகிராம்?.. புதிய இன்ஸ்டன்ட்ஸ் அம்சம் எப்படி உள்ளது?
Did Instagram Copied Snapchat Feature | இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது இன்ஸ்டன்ட்ஸ் என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தின் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுமக்கள் மத்தியில் ஏராளமான செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அத்தகைய செயலிகளில் ஒன்றுதான் மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram). இந்த செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது இன்ஸ்டன்ட்ஸ் (Instants) என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஸ்னாப்சாட்டில் (Snapchat) இருந்து காப்பி செய்யப்பட்ட அம்சம் என்று பயனர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஸ்டன்ட்ஸ் அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராமில் அறிமுகனான இன்ஸ்டன்ட்ஸ் அம்சம்
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பயனர்களின் நலனுக்காக அந்த நிறுவனம் தொடந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் இந்த இன்ஸ்டன்ட்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் குறித்து தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேச்சாக உள்ளது.
இதையும் படிங்க : அமலுக்கு வந்தததா வாட்ஸ்அப் பிரீமியம் பிளஸ்?.. வெளியான முக்கிய தகவல்!




ஸ்னாப்சாட்டை காப்பி அடித்த இன்ஸ்டாகிராம்?
இன்ஸ்டாகிராமில் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த அம்சம் ஏற்கனவே ஸ்னாப்சாட்டில் உள்ளதாகவும், அதனை பார்த்து தான் இன்ஸ்டாகிராம் தற்போது இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும் பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். காரணம், இன்ஸ்டாகிராம் தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த இன்ஸ்டன்ட் அம்சம் ஸ்னாப்சாட்டில் உள்ளதை போலவே உள்ளது என்பதுதான்.
இதையும் படிங்க : கொட்டி கிடக்கு கேஷ்பேக்.. அன்னையர் தின சேலை அறிவித்த ஆப்பிள்.. மிஸ் பண்ணிடாதீங்க!
இவை இரண்டு ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றின் செயல்பாடுகள் ஒரே மாதிரியானதாக இருக்காது. குறிப்பாக ஸ்னாப்சாட்டில் ஒருவரது புகைப்படத்தை சேவ் செய்துக்கொள்ள முடியும். அவ்வாறு சேவ் செய்யும்போது அது குறித்த தகவல் புகைப்படத்தை அனுப்பிய நபருக்கு செல்லும். ஆனால், இன்ஸ்டாகிராமில் வந்துள்ள இந்த அம்சம் அத்தகையது அல்ல. காரணம், புகைப்படங்களை சேவ் செய்யவோ, ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ அல்லது ஸ்கிரீன் பதிவு செய்யவோ முடியாது என்பதை இன்ஸ்டாகிராம் உறுதி செய்துள்ளது.
மற்றபடி ஸ்னாப்சாட் செயலியில் உள்ளதை போலவே 24 மணி நேரத்தில் புகைப்படங்கள் தானாக மறைந்துவிடும் அம்சம் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.