டாப் லோட் vs ஃபிரணட் லோட் – எந்த வகை வாஷிங் மெஷினில் குறைவான மின் கட்டணம் வரும்?
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் வாஷிங் மெஷின் என்பது ஆடம்பரம் என்பதைத் தாண்டி அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. டாப் லோட், ஃபிரெண்ட் லோட் என 2 வகை வாஷிங் மெஷின்களுக்கு இடையே உள்ள வித்தியாசம், எது நீண்ட காலத்தில் அதிக சேமிப்பை தரும் என்பது குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் வாஷிங் மெஷின் என்பது ஆடம்பரம் என்பதைத் தாண்டி அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. வீடுகளில் அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழலில் வாஷிங் மெஷின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. செமி ஆட்டோமேட்டிக், ஃபுல்லி ஆட்டோமேட்டிக், டாப் லோட், ஃபிரெண்ட் லோட் என வாஷிங் மிஷின் பல்வேறு மாடல்களில் சந்தையில் கிடைக்கின்றன. நம் தேவைக்கு ஏற்ப அதனை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். ஆனால் இதில் எது குறைவான மின் கட்டணம் மற்றும் குறைவான நீர் செலவாகும் என்பது குறித்த சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
இந்த கட்டுரையில் டாப் லோட், ஃபிரெண்ட் லோட் என 2 வகை வாஷிங் மெஷின்களுக்கு இடையே உள்ள வித்தியாசம், எது நீண்ட காலத்தில் அதிக சேமிப்பை தரும் என்பது குறித்து பார்க்கலாம். ஃபிரெண்ட் லோக் வாஷிங் மெஷினை பொறுத்தவரை மின் கட்டணம் குறைவாக வரும் என்றும், குறைவான நீர் பயன்பாடு தேவைப்படும் என்றும் கருதப்படுகறது. இப்போது வரும் மாடர்ன் ஃபிரெண்ட் லோக் வாஷிங் மெஷின்களளில் இன்வர்டர் டெக்னாலஜி, டைரக்ட் டிரைவ் டெக்னாலஜி மற்றும் பிஎல்டிசி மோட்டார்ஸ் என்ற கூடுதல் வசதிகள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிக்க : சம்மரில் ஃபிரிட்ஜில் நாம் செய்யும் 7 தவறுகள் – அதிகரிக்கும் மின் கட்டணம் – தவிர்ப்பது எப்படி?
பிஎல்டிசி மோட்டார் என்றால் என்ன?
பிஎல்டிசி (BLDC) பிரஷ் இல்லாத டைரக் கரண்ட் மோட்டார் என்பதைக் குறிக்கும். இந்த மோட்டார் குறைந்த மின்சாரத்தை செலவழிக்கும். மென்மையாக சுழலும், குறைந்த சத்தத்தில் வேலை செய்யும். இதனால் துணிகள் நன்றாக துவைக்கப்படும்போது மின் கட்டணமும் குறைவாக வரும்.
தண்ணீர் பயன்பாட்டை பொறுத்தவரை ஃபிரெண்ட் லோட் மாடல்களில் தான் குறைவாக நீர் செலவாகும். பழைய டாப் லோட் மாடல்களைக் காட்டிலும், சுமார் 50 சதவிகிதம் வரை தண்ணீரை சேமிக்கும் என கூறப்படுகிறது. அதற்கு காரணம், பிரெண்ட் லோட் வாஷிங் மெஷினில் டிரம் முழுவதும் தண்ணீர் நிரப்ப தேவையில்லை. குறைவான தண்ணீரில் துணியை சுத்தம் செய்ய முடியும். மேலும் அதிவேகமாக டிரம் சுழல்வதன் மூலம் துணி விரைவில் காய்ந்து விடும். இதனால் டிரையர் பயன்பாடு குறையும்.
இதையும் படிக்க : குழந்தை பிறப்பு விகிதம் சரிவை சந்திக்க முக்கிய காரணியாக உள்ள ஸ்மார்ட்போன்.. ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்!
டாப் லோட் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?
டாப் லோட் வாஷிங் மெஷின் பொதுவாக பழைய ஏசி மோட்டார் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மோட்டார் அதிக பவரை எடுத்துக்கொள்ளும். அதிக தண்ணீர் தேவைப்படும். இதனால் மின் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. டாப் லோட் வாஷிங் மெஷினை ஒவ்வொரு சுழற்சிக்கும் டிரம் முழுவதும் தண்ணீர் நிரப்ப வேண்டியிருக்கும். இதனால் தண்ணீர் பயன்பாடு அதிகரிக்கும். மோட்டார் அதிகம் வேலை செய்யும் என்பதால் மின்சார நுகர்வு அதிக அளவில் நடைபெறும். பல டாப் லோட் வாஷிங் மெஷினில் ஏஜிடேட்டர் எனப்படும் ஸ்பின்னிங் ராட் இருக்கும். இதனால் துணிகள் சுருண்டு, சேதமடைய அதிக வாய்ப்பிருக்கிறது.
இதனால் உங்கள் பட்ஜெட், பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாஷிங் மெஷினை தேர்வு செய்வது நல்லது.



