சென்னையில் சல்ஃபர் வாயு வெளியேறியதால் கடும் புகைமூட்டம் – ஆபத்தா?
தலைமை செயலகம் அருகே புகை மூட்டமாக காணப்பட்ட நிலையில் அந்த பக்கம் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். துறைமுகத்தில் உள்ள சல்ஃபர் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட விபத்தே இந்த புகை மூட்டத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, ஜூன் 2 : சென்னையில் தலைமை செயலகம் அருகே ஜூன் 2, 2026 இன்று திடீரென துர்நாற்றத்துடன் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் அந்த பக்கம் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். துறைமுகம் அருகே இருந்த சல்பர் பரவியதால் இந்த புகை மூட்டம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து புகை வெளியேறிய துறைமுகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சரவணகுமார் ஆய்வு மேற்கொண்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சல்ஃபர் வாயு வெளியேறியதால் கடும் புகைமூட்டம்
இந்த சம்பவம் தொடர்பாக துறைமுக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதில், வெயில் காரணமாக துறைமுகத்தில் இருந்து சல்ஃபர் ரசாயனத்தில் இருந்து வாயு வெளியேறியது. ஆனால் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், தீயணைப்பு துறை இணை இயக்குநர் சத்யநாராயணன் வெளியிட்ட தகவலில், வெளியில் காரணமாக சென்னை துறைமகத்தில் சல்ஃபரில் இருந்து புகை வந்துள்ளது. தீ பிடித்திருந்தால் கட்டுப்படுத்துவது சிரமமாகியிருக்கும். அதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றார்.




இதையும் படிக்க : கோவையில் திடீரென மோப்ப நாயுடன் களமிறங்கிய போலீஸ் படை.. ஆம்னி பேருந்துகள் சல்லடை சல்லடையாக அலசல்.. என்ன காரணம்!
புகை மூட்டமாக காணப்பட்ட தலைமை செயலகம் பகுதி
#WATCH | Chennai, Tamil Nadu: Sudden heavy smoke was seen near Secretariat, Fort St. George, causing panic and breathing difficulties. Emergency services and traffic police are on-site, managing the situation and clearing the area. pic.twitter.com/4a1hNEc4OW
— ANI (@ANI) June 2, 2026
தலைமை செயலகத்திற்கு அருகே ஏற்பட்ட இந்த திடீர் புகை காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் அந்த பகுதியில் இருந்த மக்களுக்கும் வாகன ஓட்டிகளும் கண்களில் எரிச்சல், மூச்சுத் திணறலால் அவதியடைந்தனர். தொண்டையில் எரிச்சல் காரணமாக இருமல் வந்ததாகவும் தெரிவித்தனர். முதலில் அந்த பகுதியில் எங்கேனும் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க : தாயுமானவர் திட்டம்.. சென்னையில் 18 மண்டலங்களில் 2 நாட்களுக்கு வீடு தேடி பொருட்கள் விநியோகம்..
பின்னர் தான் துறைமுகத்தில் உள்ள சல்ஃபர் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட விபத்தே ரசாயன புகை வெளியேறக் காரணம் என துறைமுக நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பிரச்னை குறித்து சென்னை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.