AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

துறைமுகம் தொகுதயில் அமைச்சர் சேகர் பாபு – தவெக வேட்பாளரிடையே மோதல்

துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயன்றதாகவும், அதைத் தடுத்ததால் அவருக்கும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அசோக்கிற்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் தவெகவினர் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு தவெகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

துறைமுகம் தொகுதயில் அமைச்சர் சேகர் பாபு – தவெக வேட்பாளரிடையே மோதல்
சேகர் பாபு - தவெக வேட்பாளர் அசோக்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Apr 2026 19:38 PM IST

சென்னை, ஏப்ரல் 23 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.  மேலும் மாலை 5 மணி நிலவரப்படி  4.71 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.  இந்த நிலையில் துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயன்றதாகவும், அதைத் தடுத்ததால் அவருக்கும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அசோக்கிற்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் தவெகவினர் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர் பாபுவுக்கும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அசோக்கிற்கும் இன்று மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களுடன் மோதிக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அமைச்சர் சேகர் பாபு தனது ஆதரவாளர்களுடன் துறைுகம் தொகுதி வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயன்றதாகவும் அதனை அசோக் தட்டிக்கேட்டதால் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கன்றன.

இதையும் படிக்க : வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!

அமைச்சர் சேகர் பாபு  –  தவெக வேட்பாளர் மோதல்

 

இந்த நிலையில் இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகளை தவெகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.  சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த சில நிமிடங்களில் இரண்டு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : வாக்குச்சாவடியில் ரகளை… வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு… சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!

இந்த நிலையில் மற்றொரு புறம் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை அதிமுகவினர் தாக்க முயன்றதாக திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து திமுகவினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காலையில் இருந்து தேர்தல் அமைதியாக நடைபெற்ற நிலையில் தற்போது வேட்பாளர்களிடையே மோதல் அதிகரித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தேசிய அளவில் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us