Tamil Nadu Election Voting: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. தனி ஆளாக வாக்களித்த இளம் பெண்..
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பல மணி நேரம் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்த சூழலில், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து வாக்குச்சாவடியில் ஷீலா என்ற பெண் தனியாக சென்று வாக்களித்துள்ளார். அந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த சூழலில், அவர் மட்டும் தனியாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 23, 2026: 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை எடுத்துக்கொண்டால், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 50 சதவீதத்தை கடந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், சென்னையில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 59.0 ஆக இருந்தது. ஆனால் தற்போது பிற்பகல் 1 மணி நிலவரப்படி மட்டும் 54.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தனி ஒரு ஆளாக வாக்களித்த இளம்பெண்:
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பல மணி நேரம் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்த சூழலில், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து வாக்குச்சாவடியில் ஷீலா என்ற பெண் தனியாக சென்று வாக்களித்துள்ளார். அந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த சூழலில், அவர் மட்டும் தனியாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல்… ஒரு மணி நிலவரம்… 56.81 சதவீதம் வாக்குகள் பதிவு!
நாங்குநேரி பெரும்பத்து வாக்குச்சாவடியில், பொதுமக்கள் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என புறக்கணித்து வந்துள்ளனர். ஆனால் அதே பகுதியை சேர்ந்த ஷீலா என்ற இளம் பெண், அந்தப் புறக்கணிப்பையும் மீறி தனியாக சென்று வாக்களித்துள்ளார்.
இதனால், கிராம மக்கள் அவரை முற்றுகையிட்டு தகராறு செய்தனர். “கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், நீங்கள் ஏன் தனியாக சென்று வாக்களித்தீர்கள்?” என கேள்வி எழுப்பினர். உடனடியாக அங்கிருந்த போலீசார் தலையிட்டு, அந்த இளம் பெண்ணை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் 2 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு:
நாங்குநேரி பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு நடந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள இளஞ்சியமங்கலம் மற்றும் கிடங்கூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இரண்டு கிராமங்களை இணைக்கும் ஆற்று பாலம் அமைக்கப்படவில்லை எனக் கூறி, இந்த முடிவை எடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: “ஆரம்பத்தில் பயம்.. அப்புறம் உற்சாகம்!” – முதல்முறை வாக்காளர்களின் நெகிழ்ச்சியான தேர்தல் அனுபவங்கள்!
இந்த நிலையில், திருவாடானை தாசில்தார் மற்றும் காவல்துறையினர் கிராம மக்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
காலை முதல் தற்போது வரை வாக்குப்பதிவு நடைபெறாதது, தேர்தல் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நிலைமை சீராகும் வகையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.