Tamil Nadu Election Poll Percentage : சட்டமன்ற தேர்தல்… ஒரு மணி நிலவரம்… 56.81 சதவீதம் வாக்குகள் பதிவு!
Tamil Nadu Election: தமிழகத்தில் ஒரு மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இது கடந்த சட்டமன்ற தேர்தல்களை விட அதிகமாகும். இதில், மாவட்டம் வாரியாக எவ்வளவு வாக்கு சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு மணி நிலவரப்படி 56.81% வாக்குப் பதிவுகள் பதிவாகியுள்ளது. இதில், வாக்களிக்க தகுதியுடைய 5. 73 கோடி வாக்காளர்களில் சுமார் 3 கோடி வாக்காளர்களுக்கு மேல் வாக்களித்துள்ளனர். இதில், சென்னையில் 54.58 சதவீதம் வாக்குகள், அரியலூர் மாவட்டத்தில் 55.18 சதவீத வாக்குகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 56.28 சதவீத வாக்குகள், கோவை மாவட்டத்தில் 58.24 சதவீத வாக்குகள், கடலூர் மாவட்டத்தில் 5.13 சதவீத வாக்குகள், தருமபுரி மாவட்டத்தில் 59.02 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதே போல,, திண்டுக்கல் மாவட்டத்தில் 59.79 சதவீத வாக்குகள், ஈரோடு மாவட்டத்தில் 61.79 சதவீத வாக்குகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 57.15 சதவீத வாக்குகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 58.98 சதவீத வாக்குகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 50.35 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கரூர் மாவட்டத்தில் 60.77 சதவீத வாக்குகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 56.21 சதவீத வாக்குகள், மதுரை மாவட்டத்தில் 54.75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
மயிலாடுதுறை முதல் தஞ்சாவூர் வரை
இதே போல, மயிலாடுதுறை மாவட்டத்தில் 53.59 சதவீத வாக்குகளும், நாகை மாவட்டத்தில் 57.07 சதவீத வாக்குகளும், நாமக்கல் மாவட்டத்தில் 62.51 சதவீத வாக்குகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 57.55 சதவீத வாக்குகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 56.78 சதவீத வாக்குகளும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 51.54 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 58.62 சதவீத வாக்குகள், சேலம் மாவட்டத்தில் 61.42 சதவீத வாக்குகள், சிவகங்கை மாவட்டத்தில் 53.50 சதவீத வாக்குகள், தென்காசி மாவட்டத்தில் 54.24 சதவீத வாக்குகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் 54.83 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
சென்னை மாவட்ட தொகுதிகள் நிலவரம்
இதில், சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை 52.76 சதவீத வாக்குகள், டி. நகர் 58.01 சதவீத வாக்குகள், ஆயிரம் விளக்கு 55 சதவீத வாக்குகள், வேளச்சேரி 56.26 சதவீத வாக்குகள், வில்லிவாக்கம் 56.66 சதவீத வாக்குகள், அண்ணா நகர் தொகுதியில் 56.61 சதவீத வாக்குகள், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 53.55 சதவீத வாக்குகள், ஆர். கே. நகர் தொகுதியில் 55.68 சதவீத வாக்குகள், எழும்பூர் தொகுதியில் 53.67 சதவீத வாக்குகள், துறைமுகம் தொகுதியில் 54.39 சதவீத வாக்குகள், திரு.வி.க. நகர் தொகுதியில் 48.74 சதவீத வாக்குகள், எழும்பூர் தொகுதியில் 53.67 சதவீத வாக்குகள், ராயபுரம் தொகுதியில் 49.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கட்சி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்
இதே போல, மு. க. ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியான கொளத்தூர் 56.59, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி போட்டியிடும் தாெகுதியான எடப்பாடியில் 60.98 சதவீத வாக்குகள், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியான பெரம்பூரில் 56.24 சதவீத வாக்குகள், திருச்சி கிழக்கு தொகுதியில் 55.95 சதவீத வாக்குகள், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் தொகுதியான காரைக்குடியில் 51.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.