15 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 சர்வதேச தொடரில் அசத்தி கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். 3 போட்டிகளில் 151 ரன்கள் குவித்த அவர், 196.10 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டுடன் தொடரின் அதிக ரன்கள் குவித்த வீரராகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.