ரஜினிகாந்தின் வாழ்க்கைப் பயணம், சுவாரஸ்யமான சம்பவங்கள், மறக்க முடியாத தருணங்கள், உணர்ச்சிகரமான அனுபவங்கள் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக அவர் உயர்ந்த விதம் ஆகியவை சுயசரிதையில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. இதனை திரைப்படமாக உருவாக்குவது குறித்து தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.