டெல்லியைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியை ஒருவர், மாணவர்களின் வருகைப் பதிவுக்காக அறிமுகப்படுத்திய வித்தியாசமான முறைக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சுமி சியாக் என்ற ஆசிரியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், மாணவர்கள் வகுப்பறைக்குள் வந்தவுடன் வழக்கமான முறையில் பெயர் அழைக்கப்படுவதற்காகக் காத்திருக்காமல், சுவரில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு வருகைப் பதிவு பலகையில் தாங்களாகவே தங்கள் வருகையைப் பதிவு செய்கின்றனர்.