பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் கணினி அமைப்புகள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கியின் அமைப்புகளைத் தாக்கியதாகக் கூறும் ஹேக்கர், சுமார் 1 டெராபைட் அளவிலான முக்கியத் தரவுகளை டார்க் வெப்பில் இலவசமாக வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆதார் எண்கள், வாடிக்கையாளர் பெயர்கள், சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு விவரங்கள், கடன் பதிவுகள், நெட் பேங்கிங் பயனர் தகவல்கள், என்.ஆர்.ஐ. மற்றும் கார்ப்பரேட் வங்கி சேவை விவரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.