ஒரு காவல்துறை அதிகாரியாக நடிப்பது இதுவே முதல் முறை – நடிகர் சசிகுமார்
Actor Sasikumar Interview | தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நாயகனாகவும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருபவர் சசிகுமார். இவர் தற்போது வதந்தி 2 என்ற இணையதள தொடரில் நடித்து உள்ள நிலையில் அது குறித்து சசிகுமார் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் வெளியாகி மக்களிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்று சுப்ரமணியபுரம். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் சசிகுமார். தொடர்ந்து இந்தப் படத்தில் இயக்குநராக மட்டும் இன்றி பரமன் என்ற முக்கிய வேடத்தில் இந்தப் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகம் ஆன சசிகுமார் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்துப் பலப் படங்களை இயக்கி உள்ளார். தொடர்ந்து இயக்குநராக வலம் வந்த இயக்குநர் சசிகுமார் கடந்த சில ஆண்டுகளாக நாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் நாயகனாக தொடர்ந்து நடித்து வரும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் படங்களில் நடித்து வரும் நடிகர் சசிகுமார் தற்போது இணையதள தொடர்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் முன்னதாக நடு செண்டர் என்ற தொடரில் நடித்து இருந்தார். இதில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து இருந்த நடிகர் சசிகுமார் தற்போது வதந்தி 2 என்ற இணையதள தொடரில் நாயகனாக நடித்து உள்ளார். இந்த தொடரில் நடித்தது குறித்து சசிகுமார் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஒரு காவல்துறை அதிகாரியாக நடிப்பது இதுவே முதல் முறை:
நான் ஒரு காவல்துறை அதிகாரியாக நடிப்பது இதுவே முதல் முறை. இந்தத் தொடரில் தாடியுடன் கூடிய ஒரு காவல்துறை அதிகாரியாக, அதிலும் குறிப்பாக ஒரு முஸ்லிம் காவலராக நான் நடிக்கிறேன். இந்தக் கதையில் நான் தாடி வைத்திருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கிறது. கிராமத்தைச் சேர்ந்த நிஜமான ஒரு சப்-இன்ஸ்பெக்டரின் (SI) பாணியை அடிப்படையாகக் கொண்டே எனது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக இயக்குநர் என்னிடம் கூறினார். இந்தத் தொடருக்குப் பிறகு, ஒரு திரைப்படத்திலும் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளேன். இதுபோன்று அடுத்தடுத்து காவலர் கதாபாத்திரங்கள் கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்றும் சசிக்குமார் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… 20 ஆண்டுகளைக் கடந்தது சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்… கொண்டாடும் ரசிகர்கள்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Actor #SasiKumar Recent
This is the first time I’m playing a police officer. In this series, I portray a police officer with a beard, and interestingly, I play a Muslim cop. There’s a specific reason behind my beard in the story. The director told me that my character is… pic.twitter.com/ddS06I9H05
— Movie Tamil (@_MovieTamil) July 28, 2026
Also Read… Soori: மாண்டாடி படத்தின் பாடலில் நடனமாடியது இப்படிதான் – சூரி ஓபன் டாக்!