AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

4-ம் கட்ட படப்பிடிப்பில் மெண்டல் மனதில் படம் – வைரலாகும் செல்வராகவன் போட்டோ

Mental Manadhil Movie Shooting Update Viral On Social Media | இயக்குநர் செல்வராகவன் தற்போது எழுதி இயக்கி வரும் படம் மெண்டல் மனதில். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்பான அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

4-ம் கட்ட படப்பிடிப்பில் மெண்டல் மனதில் படம் – வைரலாகும் செல்வராகவன் போட்டோ
மெண்டல் மனதில்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jul 2026 19:11 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனாக கடந்த 2002-ம் ஆண்டு கோலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆனார் இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனதில் இருந்து தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களை இயக்கி வந்த இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என பல சூப்பர் ஹிட் படங்களை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படங்களைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து படங்களை இயக்குவது மட்டும் இன்றி நடிகராகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இயக்குநர் செல்வராகவன் கடந்த 2022-ம் ஆண்டு பீஸ்ட் படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்துப் பலப் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருந்து வந்த இயக்குநர் செல்வராகவன் தற்போது இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

4-ம் கட்ட படப்பிடிப்பில் மெண்டல் மனதில் படம்:

அதன்படி தற்போது இயக்குநர் செல்வராகவன் அடுத்தடுத்து 7 ஜி ரெயின்போ காலணி 2 மற்றும் மெண்டல் மனதில் ஆகியப் படங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார். அதன்படி இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் மெண்டல் மனதில் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து வரும் நிலையில் மாதுரி ஜெயின் மற்றும் மோனிஷா மோகன் மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. அது தொடர்பான புகைப்படத்தை நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… Sri Sri: பொம்மா பொம்மா.. துல்கர் சல்மானின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 41 ஆண்டுகளைக் கடந்தது கமல் ஹாசனின் உயர்ந்த உள்ளம் படம்!

Follow Us