AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

OM Movie: ரசிக்கிற கண்ணான கண்மணியே… தனுஷின் ஓம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அலாக்கா லோவா’ வெளியானது!

Om Movie Alaakaa Loova Song: அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், தனுஷ் நடித்துவரும் திரைப்படம்தான் ஓம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இன்று (28/07/2026) தனுஷ் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ஓம் பட முதல் பாடல் வெளியாகியுள்ளது.

OM Movie: ரசிக்கிற கண்ணான கண்மணியே… தனுஷின் ஓம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அலாக்கா லோவா’ வெளியானது!
அலாக்கா லோவா பாடல் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 Jul 2026 19:11 PM IST

தென்னிந்திய சினிமாவில் சிறப்பான நாயகனாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவர் தற்போது முதல்வர் விஜயை (CM Vijay) போலவே ரசிகர்கள் இயக்கத்தை மிகப்பெரியதாக தொடங்கியுள்ளார். அண்மையில் இதற்கான கூட்டமும் நடைபெற்றிருந்தது. அதில் நடிகர் அஜித் குமாரின் வசங்களை பேசி மேலும் பேசப்பட்டிருந்தார். மேலும் இவர் அரசியல் வரவுள்ளதாகவும் பேச்சுகள் எழுந்துவருகிறது. அந்த வகையில், இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் நடித்துவரும் புது படம்தான் ஓம் (OM). இப்படமானது ஆரம்பத்தில் D55 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின் டைட்டில் டீஸருடன் வெளியாகியிருந்தது. இதில் நடிகர் தனுஷ் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிக்க, அவருடன் ஸ்ரீலீலா (Sreeleela) , சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் மலையாள முன்னணி ஹீரோ மம்முட்டி (Mammootty) போன்ற நடிகர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், சிறப்பாக தயாராகிவருகிறது. இதற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துவரும் நிலையில், இன்று (28/07/2026) இப்படத்தின் முதல் சிங்கிள் அலாக்கா லோவா வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஒரு நாளுக்கு 10 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்வாரு – சூர்யாவை புகழ்ந்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

தனுஷின் ஓம் திரைப்படத்தின் அலாக்கா லோவா பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

நடிகர் தனுஷ் இன்று தனது 43வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டதை வருகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடித்துவரும் புது படங்களிலிருந்து அப்டேட்டுகளும் வெளியாகிவருகிறது. அந்த வகையில் ஓம் படத்திலிருந்து சாய் அபயங்கரின் இசையில், “அலாக்கா லோவா” என்ற லிரிகள் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சாய் அப்யங்கர் பாட சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள தனுஷின் நடன காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

தனுஷ் அடுத்ததாக நடிக்கும் புது படம் :

தனுஷ் ஓம் திரைப்படத்திற்கு பின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், D56 படத்தில் இணையவுள்ளார். இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து 2024ம் ஆண்டில் வெளியான லப்பர் பந்து என்ற படத்தை இயக்கி மக்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இயக்கத்தில் தனுஷ் தனது புது படத்தில் இணைகிறார்.

இதையும் படிங்க: லோகேஷ் – அல்லு அர்ஜுனின் படத்தில் நாயகிக்கு முக்கியதுவம் இல்லையா? வைரலாகும் தகவல்

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஆரம்பத்தில் ருக்மிணி வசந்த் பேசப்பட்ட நிலையில், தற்போது நடிகை ப்ரீத்தி முகுந்தனை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் என இப்படத்தின் இயக்குநரே அப்டேட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us