2026 தமிழக தேர்தல்.. வாக்குகளை செலுத்திய சின்னத்திரை பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!
Small Screen Celebrities Vote: தமிழகமே இன்று 2026 ஏப்ரல் 23ம் தேதியில் பரபரப்பாக, தங்களின் ஜன நாயகக் கட்டமையை செய்துவருகிறார்கள். அந்த வகையில் சினிமா பிரபலங்கள் வாக்குகளை செலுத்திவரும் நிலையில், மேலும் சின்னத்திரை பிரபலங்கள் யார் வாக்குகளை செலுத்தியுள்ளார் என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் இன்று 2026 ஏப்ரல் 23ம் தேதியில் பரபரப்பாக, தேர்தல் வாக்குகள் செலுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் இன்று (23/04/2026) அதிகாலை முதல பல்வேறு சினிமா பிரபலங்கள் (Cinema celebrity) மற்றும் சீரியல் பிரபாலங்கள் (Small Screen) என பலரும் தங்களின் ஜன நாயகக் கடமையை செலுத்துவருகிறார்கள். அந்த வகையில் பிரபலங்களை தங்களின் வாக்குகளை செலுத்திவருகிறார்கள். சின்னத்திரை சீரியல் நடிகர்கள் (Serial Actors) மற்றும் இதர பிரபலங்களும் தங்களின் ஜன நாயாக கடமையை நிறைவேற்றியதாக பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்கள். தமிழில் பிரபல சீரியல் நடிகையாகவும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளர்தான் திவ்யா கணேஷன் (Divya Ganesh).
இவர் இன்று 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை செலுத்தியதாக பதிவை வெளியிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், “நீங்களும் வாக்கு செலுத்துங்கள் ” என அவர் கூறியுள்ளார். தற்போது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: நல்ல எதிர்காலத்திற்காக என் உரிமையும் கடமையும் நிறைவேற்றினேன் – நடிகர் சூரி
நடிகை திவ்யா கணேசன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
மேலும் பிரபல பாடகியும், சின்னத்திரை தொகுப்பாளராகவும் இருந்துவருபவர் ஷிவாங்கி. இவரும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாக்களித்துவிட்டதாக, ஆள்காட்டி விரலை காண்பித்து பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் தனது முதல் வாக்கை செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
ஷிவாங்கி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோ பதிவு:
View this post on Instagram
இதையும் படிங்க: தமிழக தேர்தல்.. ஜன நாயகக் கடமையாக ஆற்றிய தமிழ் பிரபலன்கள்.. யார் யாருனு பாருங்க!
தமிழ் சின்னத்திரை நடிகருக்கும், நிஜ ஜோடியான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் இணைந்தே தங்களின் வாக்கை செலுத்தியுள்ளனர். அதில் நடிகை ஆலியா மானசா, வா தலைவா வா.. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகை ஆலியா மானசா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
மேலும் குக் வித் கோமாளி புகழ், பிக்பாஸ் பிரபலம் கனி திரு, நடிகை ஜனனி அசோக்குமார், நடிகை கண்மணி, தொகுப்பாளர் அஸ்வத், நடிகை காயத்ரி மற்றும் அவரின் கணவர் யுவராஜ் என பல்வேறு பிரபலங்கள் தங்களின் வாக்குகளை செலுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக பதிவுகளையும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.