AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Elections Poll Percentage: ஜனநாயக திருவிழா.. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு..

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காலை 7:00 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம் என கூறப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட 4 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

Tamil Nadu Elections Poll Percentage: ஜனநாயக திருவிழா.. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 23 Apr 2026 16:32 PM IST

ஏப்ரல் 23, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காலை 7:00 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம் என கூறப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட 4 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடி என இருக்கும் நிலையில், அதில் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். தொடர்ந்து பலரும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி 55.35% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அது கிட்டத்தட்ட 15% அதிகரித்து, 70% வாக்குப்பதிவு எட்டியுள்ளது. இந்த ஆண்டு வாக்குப்பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: வாக்குச்சாவடியில் ரகளை… வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு… சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!

70 சதவீதம் கடந்த வாக்குப்பதிவு:

ஏனெனில், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடிக்கு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடியாக உள்ளது. இந்த நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும் மூன்று மணி நேரம் இருப்பதால், 90% வரை வாக்குப்பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: விஜய் கெட்டப்பில் வந்து வாக்கு செலுத்திய வாக்காளர்கள்… திருச்சி கிழக்கு தொகுதியில் சுவாரஸ்யம்!

  • கரூர் – 76.08%
  • சேலம் – 75.79%
  • ஈரோடு – 75.61%
  • திருப்பூர் – 75.38%
  • தர்மபுரி – 74.68% (திருத்தம் செய்யப்பட்டது)
  • திண்டுக்கல் – 74.35%
  • காஞ்சிபுரம் – 72.51%
  • ராணிப்பேட்டை – 72.46%
  • திருப்பத்தூர் – 71.65%
  • வேலூர் – 71.46%
  • கோவை – 71.23%
  • திருவண்ணாமலை – 71.19%
  • கள்ளக்குறிச்சி – 71.11%
  • திருச்சி – 71.50%
  • பெரம்பலூர் – 70.54%
  • விருதுநகர் – 70.24%
  • கிருஷ்ணகிரி – 70.07%
  • நாகப்பட்டினம் – 69.96%
  • புதுக்கோட்டை – 69.85%
  • செங்கல்பட்டு – 69.46%
  • அரியலூர் – 68.97%
  • கடலூர் – 68.53%
  • திருவாரூர் – 68.43%
  • சென்னை – 68.13%
  • திருவள்ளூர் – 68.07%
  • தேனி – 67.68%
  • மதுரை – 67.15%
  • தென்காசி – 67.14%
  • தஞ்சாவூர் – 66.65%
  • மயிலாடுதுறை – 65.80%
  • தூத்துக்குடி – 65.18%
  • சிவகங்கை – 64.74%
  • நீலகிரி – 63.76%
  • கன்னியாகுமரி – 63.95%
  • இராமநாதபுரம் – 63.14%
  • திருநெல்வேலி – 62.84%

Follow Us