மும்பை லோக்கல் ரயிலில் நடந்த ஒரு வினோத சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் தண்டவாளத்தில் ஒருவர் மிகவும் சாதாரணமாக நடந்து செல்ல, அவருக்குப் பின்னால் மும்பை லோக்கல் ரயில் மெதுவாக நகர்ந்து வரும் காட்சி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், தண்டவாளத்தில் நடந்து சென்ற நபரை எச்சரிப்பதற்காக ரயில் ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் அடிப்பது கேட்கிறது.