சென்னைக்கு அருகே தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து – பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக் கோட்டை என்ற பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டே செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்பட்டு வந்த ஹூண்டாய் மோபிஸ் என்ற நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ. 500 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் என தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம், மே 31 : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக் கோட்டை என்ற பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டே செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்பட்டு வந்த ஹூண்டாய் மோபிஸ் என்ற நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ. 500 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் என தகவல் வெளியாகியுள்ளது. தொழிற்சாலை வளாகத்தில் செயல்பட்டு வந்த 3 யூனிட்களில் கார்களுக்காக தயாரிக்கப்படும் ஆடியோ சிஸ்டம் மற்றும் ஏர் பேக் தயாரிக்கும் 2 யூனிட்கள் செயல்பட்டு வந்துள்ளன. இந்த நிலையில் தீ விபத்தில் அவை முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சென்னைக்கு அருகே தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து
இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் ஹூண்டாய் மோபிஸ் எனப்படும் மின்னணு சாதனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிர்சாலை செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் வழக்கம்ோ மே 31, 2026 ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வழக்கம் போல பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆலையின் ஒரு பக்கம் இருந்த சேமிப்பு கிடங்கில் திடீரென தீபிடித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.. காட்டுப்பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. 4 சிறுவர்கள் கைது!




ஆலையில் இருந்து கரும்புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக தொழிலாளர்களை ஆலையை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியிருக்கன்றனர். தீ விபத்து ஏற்பட்ட உடனேயே அங்கு பணியில் இருந்த அனைத்து தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை.
ஆனால் சேமிப்புக் கிடங்கு முழுவதும் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இரந்த காரணத்தால் தீ மளமளவென தொழிற்சாலையின் மற்ற பகுதிகளில் பரவத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் சிப்காட் தொழிற்பேட்டையில் பணியில் இருந்த தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலைத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தீ பரவும் தீவிரத் தன்மையை உணர்ந்து படப்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்புத்துறையினர் வரவைக்கப்பட்டனர். இதனையடுத்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
இதையும் படிக்க : மதுபான பாரில் ஏற்பட்ட தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் படுகொலை.. சென்னையில் பயங்கரம்..
இந்த தீவிபத்தில் பல கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தீயில் கருகி நாசமடைந்தன. இந்த சம்பவம் குறித்து ஒரகடகம் காவல்துறையினர் தற்பொழுது வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகன்றனர்.