AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருவள்ளுவருக்கு காவி உடை… தமிழக மக்களிடம் ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும்.. சண்முகம் வலியுறுத்தல்!

Marxist Shanmugam Condemns Governor Arlekar: திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது, திருவள்ளுவர் சனாதினி என்று கூறிய விவகாரத்தில் தமிழக மக்களிடம் ஆளுநர் அர்லேகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

திருவள்ளுவருக்கு காவி உடை… தமிழக மக்களிடம் ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும்.. சண்முகம் வலியுறுத்தல்!
தமிழக மக்களிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 31 May 2026 17:49 PM IST

தமிழக ஆளுநர் மாளிகையில் உள்ள திருவள்ளுவர் படத்துக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், திருவள்ளுவர் சனாதினி தான் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்,  இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவத்தை வலியுறுத்திய திருவள்ளுவரை சனாதனி என்று வரையறுக்கும் தமிழக ஆளுநரின் கருத்து மிகவும் கண்டனத்திற்குரியதாகும். எந்த மதத்தையும் சாராத திருவள்ளுவரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது அவரை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.

தமிழக மக்களிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்

எனவே, தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் இந்த செயலுக்கு அவர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் மாளிகையில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார். இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் செய்திகள் வாயிலாக வெளியாகி இருந்தன.

மேலும் படிக்க: தேர்தலில் படுதோல்வி.. இளம் தலைமுறையினரை ஈர்க்க திமுகவின் புதிய முயற்சி!!

திருவள்ளுவர் காவி உடை விவகாரத்தின் பின்னணி

இதில், திருவள்ளுவரின் புகைப்படத்தில் அவருக்கு வெள்ளை உடைக்கு பதிலாக காவி உடை அணிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், திருவள்ளுவரின் கையில் ருத்திராட்ச மாலை மற்றும் அவரது நெற்றியில் விபூதி ஆகியவை இடம் பெற்று இருந்தது. இதை பார்த்த திமுக உள்ளிட்ட இடது சாரி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலினும் தமிழர்களின் சுயமரியாதையே மீண்டும் மீண்டும் உரசி பார்க்க வேண்டாம் என்றும்

ஆளுநரின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

இந்த விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அந்த வகையில், தற்போது திருவள்ளுவர் காவி உடை விவகாரத்தில் தமிழக மக்களிடம் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் படிக்க: “திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்”.. ‘மியூட்டில்’ இருக்கும் முதல்வர்.. தமிழர் சுயமரியாதையை உரசிப் பார்க்காதீங்க.. கொந்தளித்த உதயநிதி!!

Follow Us