AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்”.. ‘மியூட்டில்’ இருக்கும் முதல்வர்.. தமிழர் சுயமரியாதையை உரசிப் பார்க்காதீங்க.. கொந்தளித்த உதயநிதி!!

ஜனவரி மாதத்தில் 'திருவள்ளுவர் தினத்தை' தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடர்ந்து கொண்டாடி வரும் நிலையில், வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது? இத்தகைய செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.

“திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்”.. ‘மியூட்டில்’ இருக்கும் முதல்வர்.. தமிழர் சுயமரியாதையை உரசிப் பார்க்காதீங்க.. கொந்தளித்த உதயநிதி!!
உதயநிதி ஸ்டாலின்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 31 May 2026 08:26 AM IST

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவர் படத்திற்கு காவிச் சாயம் பூசப்பட்டதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழர்களின் சுயமரியாதையை மீண்டும் மீண்டும் உரசிப் பார்க்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில், வழக்கமான வெள்ளை ஆடைக்கு பதிலாக காவி உடை மற்றும் விபூதி, ருத்ராட்சத்துடன் கூடிய திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு, அதற்கு ஆளுநர் ஆர்லேகர் மரியாதை செலுத்தியுள்ளார். இந்த காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : “உன் அப்பன் சாகுறத பாரு”.. மகள் கண் முன்னே துடிதுடிக்க கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்!!

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்:

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பின்வருமாறு குற்றம் சாட்டியுள்ளார். சுயமரியாதையை உரசிப் பார்க்க வேண்டாம்: தமிழர்களின் அடையாளம் மற்றும் பண்பாட்டின் சிகரமாக விளங்கும் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவதன் மூலம், தமிழர்களின் சுயமரியாதையை பாசிஸ்டுகள் மீண்டும் உரசிப் பார்க்கிறார்கள்.

திருவள்ளுவரைத் தொடர்ந்து அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும், அதனைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்க்கும் தற்போதைய ‘சோபா மாடல்’ அரசுக்கும் எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசின் வழக்கம்:

ஜனவரி மாதத்தில் ‘திருவள்ளுவர் தினத்தை’ தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடர்ந்து கொண்டாடி வரும் நிலையில், வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?இத்தகைய செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.

முதலமைச்சருக்கு கேள்விக்கணைகள்:

தொடர்ந்து தமிழக அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின், “டெல்லிக்குச் சென்று தமிழ்த்தாய் வாழ்த்து பாட அனுமதி கொடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டது போல, இந்த விஷயத்திலும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “சட்டம் ஒழுங்கு பிரச்சினையில்தான் முதலமைச்சர் அமைதியாக இருக்கிறார் என்றால், கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடிக்கும் அநியாயத்தைத் தட்டி கேட்கவும் தயங்குவது ஏன்?

இதையும் படிக்க : “புதிய ரேஷன் கார்டு”.. விரைவில் சிறப்பு முகாம்கள்.. அமைச்சர் வெங்கடரமணன் சொன்ன GOOD NEWS!!

எப்போதுமே ‘மியூட்’ மோடில் இருக்கும் ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார் என்ற தைரியத்தில்தான் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு மீண்டும் மீண்டும் காவிச் சாயம் பூசும் துணிச்சல் அவர்களுக்கு வருகிறது” என்றும் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் அருண்ராஜ் கண்டனம்:

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து அமைச்சர் அருண் ராஜ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம். லோக்பவனில் (அல்லது எந்தவொரு அரசு/பொது இடங்களிலும்) திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது தவறு! என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவர் படத்திற்கு காவி நிறம் பூசப்பட்ட இந்த விவகாரம் தமிழக அரசியலில் தற்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us