AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருச்சி வரும் முதல்வர் ஜோசப் விஜய்.. இந்த ரூட்ல போகாதீங்க… போலீசாரின் அதிரடி உத்தரவு!

Trichy Traffic changed : முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நாளை திருச்சி வருகை தர உள்ள நிலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், முக்கிய இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் தெரிவித்து உள்ளார்.

திருச்சி வரும் முதல்வர் ஜோசப் விஜய்.. இந்த ரூட்ல போகாதீங்க… போலீசாரின் அதிரடி உத்தரவு!
திருச்சியில் போக்குவரத்து மாற்றம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 31 May 2026 18:33 PM IST

தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுள்ள ஜோசப் விஜய் தான் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உள்பட தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்ற பிற தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி நாளை திங்கள்கிழமை ( ஜூன் 1- ஆம் தேதி) சத்திரம் பகுதியில் உள்ள தூய வளனார் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்று பேச உள்ளார். இதற்கு முன்னதாக, திருச்சி விமான நிலையம் முதல் சத்திரம் வரை சாலை வலம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், திருச்சியில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை திங்கள்கிழமை (ஜூன் 1- ஆம் தேதி) காலை 10 மணி முதல் மாநகர பேருந்துகள், மத்திய பேருந்து நிலையம், திருவெறும்பூரில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மாற்றம் – ட்ரோன்கள் பறக்க தடை

இதே போல, இந்த பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை மரக்கடை வழியே மெயின் கார்டு காந்தி சிலை அருகே இறக்கி விட்டு அரண் சாலை வழியாக செல்லலாம். திண்டுக்கல்- சென்னை கனரக வாகனம் மணப்பாறையில் இருந்து குளித்தலை முசிறி வழியாக செல்லலாம். தஞ்சை கரூர் செல்லும் கனரக வாகனம் அரியலூர், பெரம்பலூர், துறையூர், வழியாக செல்ல வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் அமைச்சர் விஜய் வருகையையொட்டி, நாளை பாதுகாப்பு கருதி முக்கிய இடங்களில் ஆளில்லா வான்வழி வாகனம், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி ட்ரோன்கள் பறக்க விடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: “ஊழல் செய்யாமல் வேலை செய்ய வந்துள்ளோம்; கொஞ்சம் டைம் கொடுங்க!”.. அமைச்சர் ரமேஷ் நெகிழ்ச்சிப் பேச்சு!

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில், திருச்சி கிழக்கு தொகுதி உள்பட அந்த மாவட்டத்தில் உள்ள பிற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த தொகுதிகளின் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்கான நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில், முதல்வரும் விஜய் பங்கேற்று பேச உள்ளார்.

நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

இதற்கு முன்னதாக திருச்சி விமான நிலையம் முதல் சத்திரம் வரை முதல்வர் விஜய் ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக, முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பாதுகாப்புக்காக ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது நன்றி தெரிவிக்கும் கூட்டத்துக்காக தூய வளனார் கல்லூரி மைதானத்தில் மேடை மற்றும் பந்தல், முதல்வர் ஓய்வு எடுக்கும் பிரத்தியேக அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விஜய் துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்… – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு

Follow Us