AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை.. 3 இடங்களில் அதிகாலையிலேயே நுழைந்த அதிகாரிகள்!

NIA Officials Conducted Raid : தமிழகத்தில் 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்னர். இந்த திடீர் சோதனையால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனையின் முடிவில் காரணம் தெரிய வரும்.

தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை.. 3 இடங்களில் அதிகாலையிலேயே நுழைந்த அதிகாரிகள்!
தமிழகத்தில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 30 May 2026 11:31 AM IST

தமிழகத்தில் திருச்சி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 3 இடங்களில் அதிகாலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சனிக்கிழமை ( மே 30- ஆம் தேதி) அதிகாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக, கேரள மாநிலம், கொச்சியில் செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்களது கார்களில் அதிரடியாக சம்பந்தப்பட்ட 3 இடங்களில் வந்து இறங்கினர். அவர்கள் மேற்கண்ட இடங்களில் அதிகாலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், இந்த சோதனை எதற்காக நடைபெறுகிறது என்ற விவரம் உடனடியாக வெளியாகவில்லை. மேலும், சோதனைகளுக்குப் பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தகவல்கள் உள்ளிட்டவை தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்று தெரிகிறது.

பயங்கரவாத அமைப்பு தொடர்பான சோதனையா

மேலும், எந்த வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றது என்பன உள்ளிட்ட தகவல்களும் வெளியிடப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சோதனை தீவிரவாதிகள் தொடர்பாக நடைபெறுகிறதா அல்லது மாவோயிஸ்ட் தொடர்பான வழக்கு தொடர்பாக நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை. அதிகாலை முதல் நடைபெற்று வரும் இந்த திடீர் சோதனையால் இந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வேட்பாளர்களே அலர்ட்.. ஜூன் 3-க்குள் தேர்தல் செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும்.. கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

என்ஐஏ சோதனைக்கு உள்ளூர் போலீசார் பாதுகாப்பு

மேலும், உள்ளூர் போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை சோதனை தகவலை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்தில் கூடினர். அவர்களை உள்ளூர் போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனை நிறைவடைந்த பின்னர் இது தொடர்பான தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.

சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பான சோதனையா?

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சன்னதியில் இருந்த தங்கம் சென்னையில் பாலீஷ் செய்வதற்காக தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது. இந்த பணிகள் நிறைவடைந்து கோயில் நிர்வாகத்திடம் தங்க தகடுகள் சுமார் 4.5 கிலோ குறைந்திருந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனரா என்ற தகவலும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: புதுச்சேரிக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் 2 புதிய “எஸ்இசி” திட்டங்கள்… 8,500 பேருக்கு வேலை வாய்ப்பு!

Follow Us